பக்கம்:மானிட உடல்.pdf/330

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

292 மானிட உடல் கொல்லேஜன் நார் (collagen fibre). பெருந்தசையிலுள்ளது. ஒருவகைப் பி.சிதம். ஊன்பசை போன்றது. சிலவகை இணைக் கும் இழையங்களில் இன்றியமையாத பொருளாக உள்ளது. கோரியோனிக் கோனடோ ட்ரோபின் (chorionic gonado trophin). அடித்தலைச் சுரப்பியிலிருந்து ஊறும் ஒரு வகை ஹார்மோன். இது பாலறி-சுரப்பிகளைப் பாதிக்கின்றது. கோலஸ்டெரால் (cholesterol). ஒரு வகைக் கொழுப்புப் பொருள் ; பித்தநீரின் இயைபுப் பொருள்களில் ஒன்று. இது நாம்பு இழையம், குருதி, முட்டையின் வெண்கரு ஆகியவற்றி லும் உள்ளது. கோனடோ ட்ரோபின் (gonadotrophin). Byly šÁs?sv# காப்பியில் ஊறும் ஒரு வகை ஹார்மோன். gag:#4,6 pr arso 3,3.sir (monosaccharides). e.-6.virao sveitar கார்ப்போஹைட்ரேட்டுகள் இவ்வகைச் சருக்கரைகளாக மாறி உடலில் சேருகின்றன. சாக்யூல் (saccule). உட்காதிலுள்ள இரண்டு நுட்பமான அமைப்புக்களில் ஒன்று. மற்முென்று, உட்ரிகில். இவை உட் காதின் நடுப்பகுதியில் உள்ளன. சிக்மாய்டு மடக்கு (sigmoid fiexure). மலக்குடலின் மேலுள்ள பெருங்குடல் பகுதியில் உள்ள மடக்கு. இது எளிதில் அசையக் கூடியது; இடுப்பறையில் தொங்கிக்கொண் டிருப்பது. சிதைமாற்றம் (catabolism). உயிர்ப்பொருள்கள் சிதைந்து உட் கிரகிக்கக் கூடிய நிலையை அடைந்து ஆற்றலை வெளிப்படுத் துதல். சிலேட்டுமம் (mucin). இாைப்பையிலுள்ள சளிச்சவ்வின் சில வகை உயிரணுக்கள் சுரக்கும் ஒருவகைச் செரிமானச் சாறு. சிறுநீரக முடிச்சு (glomertilus). சிறு ாேகத்திலுள்ள ஒரு பகுதி. சினர்ஜிஸ்டுகள் (synergists). சுருங்கும் தன்மையுள்ள ஒரு வகைத் தசைகள். størì Gagą # ssor zsir (synergetic muscles). *GÉGá தன்மையுள்ள ஒரு வகைத் தசைகள். ஒரு பக்கம் மட்டிலும் நெகிழக்கூடிய தசைகளைத் தேவைக்குமேல் நெகிழாதிருப்பதற். காக இழுத்து நிறுத்த உதவுகின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மானிட_உடல்.pdf/330&oldid=866301" இலிருந்து மீள்விக்கப்பட்டது