பக்கம்:மானிட உடல்.pdf/334

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

296 மானிட உடல் நார்பினெப்ரின் (norepinephrine). நார் அட்ானலினின் மற்ருெரு பெயர். நிண நீரகம் (fibrinogen). பெரும்பாலும் கல்லீரல் அணுக் களிலிருந்து உண்டாகும் ஒருவகைப் பிசிதம். இஃதுடன் த்ரோம்பின் சேர்ந்து பைப்ரின் என்ற பொருளை உண்டாக்கு கிறது. பைப்ரின்தான் குருதியுறைதல். நிணநீர் (lymph). இழைய அனுக்களைச் சூழ்ச்திருக்கும் ஒரு வகைத் திரவம். இது பளிங்குபோல் சிறிதளவு மஞ்சள் நிறமாக இருக்கும். இது பிாத்தியேகமான குழல்களில் வடிகின்றது. நியூட்ரோபில்ஸ் (neutrophils). குருதியிலுள்ள வெள்ளை யனுக்களில் ஒரு வகை; இவை எாாளமாக உள்ளன. சிலவகை பாக்டீரியா இவற்றைக் கவரும். பாக்டீரியா இவற்றில் கரைந்து விடும். சில சமயம் பாக்டீரியா கசையாது போவதும் உண்டு. நீர்க்குருதி (plasma). குருதியின் நீர்ப்பொருள். இதில் ஊனீரும் கிண ாேகமும் இருக்கும்; இவை குருதி யுறைதலுக் குத் துணை புரிபவை. துரைப்புளியம் (enzyme). உடலிலுள்ள உயிருள்ள இழையங் களில் உண்டாகும் ஒருவகைப் பொருள். இது தாவரம் அல்லது விலங்குப் பொருள்களில் கிரியா ஊக்கியாக இருந்துகொண்டு வேதியல் மாற்றங்களை துரிதப்படுத்தும். одвi rrsir (nephron), சிறு நீாகத்தில் செயற்படும் பகுதிகளில் மிகச் சிறியது; குழல்போன்ற அமைப்புடையது. சிறுாேகத்தில் இத்தகைய குழல் 15 இலட்சம் உள்ளது ; நெருங்கி அமைக் திருக்கின்றது. பாரா தார்மோன் (para thormone). துணைப்புரிசைச் சாப்பி யில் ஊறும் ஹார்மோன். பாளியா (fascia). தசைகள் அசையும்பொழுது அவை தம் இருப்பிடங்களிலிருந்து நழுவாதிருக்கும் பொருட்டு அவற்றை இழுத்துப் பிரித்து நிறுத்தும் அகன்ற நார் இழையம். பாளினியன் அணுவறை (Pacinian body). தோலின் அடியிலும் தோலிலும் பாவியுள்ள நாம்புகளின் முனைகளில் குமிழ் போன்றுள்ள துண்ணிய பகுதி. பாஸ்போலிபிட் (phospholipid). நீர்க்குருதியில் அடங்கி யுள்ள பொருள்களில் ஒன்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மானிட_உடல்.pdf/334&oldid=866308" இலிருந்து மீள்விக்கப்பட்டது