பக்கம்:மானிட உடல்.pdf/335

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைச்சொற்கள் (விளக்கக் குறிப்பு) 297 பிசிர்கள் (cilia). உயிர் அனுக்களிலுள்ள மயிர் போன்ற உறுப் புக்கள். அவை சதா தம்முடைய அசைவுகளினல் ஒரே வழியில் பல்வேறு பொருள்களை முன்னுக்குத் தள்ளிக்கொண் டிருக்கின்றன. பிட்டோளின் (pitocin). அடித்தலைப்பின் சுரப்பிச் சற்றிலி ருந்து பிரித்தெடுக்கப்பெறும் இரண்டு பொருள்களில் ஒன்று. பிட்ரெளின் (pitressin). அடித்தலைப் பின்-சுரப்பிச் சாற்றி லிருந்து பிரித்தெடுக்கப் பெறும் இரண்டு பொருள்களில் மற்ருென்று. பிராக்கியாலிஸ் (brachialis). கையிலுள்ள இருதலைத் தசைச் சுருங்கும்பொழுது அஃதுடன் சுருங்கும் இரு மடக்குத் தசை களில் ஒன்று. பிராக்கியோரேடியாவிஸ் (brachioradialis). கையிலுள்ள மடக்குத் தசைகளில் மற்முென்று. பின் கணிர் (vitreous humour). கண்ணின் பின்புற அறையி லுள்ள ஒளி புகும் சளிபோன்ற ஒரு வகைப் பொருள். புராஜெஸ்ட்ரோன் (progesterome) கார்ப்பஸ் லூட்டியத்தி லுள்ள லூட்டின் அணுக்கள் சுரக்கும் ஒரு வகை ஹார்மோன். அது இளஞ்சூலை ஏற்பதற்குக் கருப்பையை தயாராக்குகிறது. அன்றியும், எஸ்ட்ரோஜென் என்ற மற்ருெரு ஹார்மோனுடன் சேர்ந்து பாற்சுரப்பிகளின் வளர்ச்சிக்கும் துணை செய்கிறது. புரோத்ரோம்பின் (prothrombin). குருதி உறைதலில் பங்கு கொள்ளும் ஒரு வகைப் பிசிதப் பொருள். புறத்துறுப்பு (limb). இதயம், நுரையீரல் போலன்றி கை, கால்கள் போன்ற உறுப்புக்கள். புறணி (cortex). ஒர் உறுப்பிலுள்ள வெளிப்புறப் பகுதி. (எ-டு) மாங்காய்ச் சுரப்பியிலுள்ள பகுதி. புரோட்டியோஸஸ் (proteoses). பி.சிதத்தின் பகுதிப்பொருள் களில் ஒன்று. பெப்வலின் என்ற நொதி இதனைப் பிரிக்கிறது. பெப்டிக் புண்கள் (peptic ulcers). உணர்ச்சிக் கோளாறு களால் எற்படும் ஒருவிதி நோய். பெப்டோன் (peptone). செரிமானத்தின்பொழுது பெப்வலின் என்ற நொதியின் செயலால் உண்டாகும் ஒருவித பிசிகப் பொருள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மானிட_உடல்.pdf/335&oldid=866310" இலிருந்து மீள்விக்கப்பட்டது