பக்கம்:மானிட உடல்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குருதியோட்ட மண்டலம் 29 கள், சிறிய நாடிகள் ஆகியவற்றைப்போலவே அமைந்துள் ளன. ஆல்ை, ஒரு வேற்றுமை உண்டு. வடிகுழல்களின் சுவர்கள் சற்று மெல்லிதானவை; அவற்றின் குறுக்களவு களும் சற்றுப் பெரியவை. பெரும்பாலான வடிகுழல்களில் உள்ள வால்வுகள் (படம்-10) நாளக் குருதியைப் பின்னுேக் கிப் பாயாமல் தடுத்து நிறுத்தக் கூடியவை. குருதிவட்டத்தின் இயக்க வகையியல் குருதி ஒட வேண்டுமானல் அது இடப்புற ஏற்றறையி லிருந்து ஒரு குறிப்பிட்ட அளவு அமுக்கத்துடன் வெளிப் பட வேண்டும். இந்த அமுக்கம் கீழறை சுருங்குவதையும், வெளிவரும் குருதி சந்திக்கும் தடையையும் பொறுத்தது. உடலெங்கும் உள்ள குழல்களில் முன்னதாகவே உள்ள குருதியின் சடத்துவமே இதற்கு முக்கிய தடையாகும். சிறு நாடிகள்தாம் இத்தடையை அளவுடன் ஒழுங்குபடுத்துபவை. அவற்றின் தசையுறைகள் சுருங்கும்பொழுது, குருதி பாய் வதிலுள்ள தடை மிகுதியாகிறது. அவற்றின் மிருதுவான தசைகள் விரியும்பொழுது, அவற்றின் குறுக்களவும் விரிந்து குருதி எளிதாகப் பாய்ந்து செல்லுகிறது ; இதயத்தை விட்டுச் செல்லும் குருதியின் அமுக்கமும் குறைகிறது. இதயம் விரியுங்கால் சிறு நாடிகளும் அமுக்கத்தை நேரடியாக நிதானப்படுத்துகின்றன. அவை முழுதும் விரிங் திருக்கும்பொழுது, பாய்குழல் மண்டலத்தில் இதயச் சுருக் கத்தால் புகும் குருகி இழைய துண்புழைகளிலும் வடிகுழல் களிலும் ஒடிவிடும். ஆனல், சிறுநாடிகள் சுருங்கிக் குருதியின் ஒரு பகுதியை அணைகட்டித் தேக்கி நிறுத்துவதுபோல் நிறுத்திவிடும். இக் குருதிதான் இதயம் விரியுங்கால் அமுக் கத்தை உண்டாக்குகிறது. இதயம் விரியுங்கால் போதுமான அளவு அமுக்கத்தை நிலைநிறுத்த வேண்டுமானல், பெருநாடி யின் வால்வு மிக இறுக்கமாக மூடிக்கொள்ளக் கூடியதாக இருக்க வேண்டும். இதயம் விரியுங்கால் குருதியோட்டத்தின் அமுக்க எல்லைகள் 70-லிருந்து 90 மில்லி மீட்டர் பாதாஸ் அளவாகும் ; இதயம் சுருங்கும்பொழுது அவ்வெல்லைகள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மானிட_உடல்.pdf/37&oldid=866386" இலிருந்து மீள்விக்கப்பட்டது