பக்கம்:மானிட உடல்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குரு தி யும் நின நீ ரும் நம் உடலிலுள்ள முடிவற்ற பல்வேறு செயல்களில் ஈடுபடும் கோடிக் கணக்கான உயிரணுக்களுக்கு ஊட்டம் தருவதற்குக் குருதி ஒரு வழியாக அமைந்துள்ளது. உயர்ந்த முறையில் சிறப்பாக அமைந்துள்ள இழையங்களின் செயல் களும்" குருதியோட்டத்தின் மூலம் பெறும் பண்படாப் பொருள்களைப் பொறுத்தே அமைந்துள்ளன. குருதியிலுள் சில பொருள்கள் குருதியின் ஒரு பகுதி யாகிய நீர்க் குருதியில் உள்ளன. குருதியின் மொத்தப் பரிமாணத்தில் பாகிக்கு மேல் நீர்க் குருதியாக உள்ளது. மீதியுள்ள பகுதி குருதி உயிரணுக்களாலானது; குருதி உயி ானுக்கள்தாம் மிக இன்றியமையாக பொருள்களேக் கொண்டு செல்கின்றன. குருதியின் சில பகுதிகள் சுரப்பு நீர்களா லானவை. இச் சுரப்பு நீர்கள் தாம் தோன்றும் சுரப்பிகளி லிருந்து அந் நீர்கள் தேவையாகவுள்ள உயிரணுக்களுக்குக் கொண்டு செல்லப் பெறும். குருதியின் ஏனைய பகுதிகள் கழிவுப் பொருள்களாலானவை ; இக் கழிவுப் பொருள்கள் அவை நீக்கப்பெறும் இடங்களுக்குக் கொண்டுசெல்லப் பெறு கின்றன. பல்வேறு பொருள்கள் இடைவிடாது குருதியினுள் வந்துகொண்டே இருக்கின்றன ; அவை தொடர்ந்து நீக்கப் பட்ட வண்ணமும் இருக்கின்றன. எனினும், இப்பொருள் விேவை எட்டாம் அத்தியாயத்தில் காண்க. 3 . يع.ntrا

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மானிட_உடல்.pdf/41&oldid=866437" இலிருந்து மீள்விக்கப்பட்டது