பக்கம்:மானிட உடல்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 மானிட உடல் தான் கார்பன் மோனுக்ஸைடு. கார்பன் மோனக்ஸைடு விரைவில் கொல்லும் தன்மையுடையது. அது உயிரியத்தை விட விரைவாகக் குருதி நிறமியுடன் ஒன்று சேரக்கூடியது. அதை உடனே நீக்காவிட்டால் ஒரு சிலமணி நேரத்தில் இறப்பை நேர்வித்து விடும். குருதி நிறமியில் அயம் மிகவும் இன்றியமையாததொரு பகுதி; எனவே, சிவப்பு அனுவிற்கும் அது இன்றியமையாத தாகின்றது. நாம் உட்கொள்ளும் உணவில் அயக் குறைவு இருந்தால், மிகக் குறைவான சிவப்பு அனுக்களே உற்பத்தி ஆகக் கூடும்; அஃதாவது, குருதி நிறமியின் அளவு குருதியில் குறைந்திருக்கும். இது ஒருவித குருதிச் சோகை என்ற நாயாகும். அயச் சக்கை உட்கொள்ளச் செய்தோ அல்லது நாம் உண்னும் உணவில் அதிக அளவு அயச் சத்தைக் கலந்தோ மருத்துவர்கள் இந் நோயைப் போக்குவார்கள். பலருடைய உடலில் தேவையான அளவு சிவப்பு அணுக் கள் இல்லாதிருப்பதற்குப் பல்வேறு காரணங்கள் உள. அவர்கள் குருதி யொழுக்கின் காரணமாகக் குருதியை இழங் ருக்கலாம். நாட்பட்ட தொற்றுநோய் எலும்பு மச்சையைச் சோர்வுறச் செய்யும்; எரித்சோசைட்டிஸைச் சிதைக்கவும் கூடும். இந்த அணுக்கள் குறைந்த அளவில் உற்பத்தியாகவும் கூடும். காரணம், எரித்சோசைட்டிஸைப் பக்குவப்படுத்தும் பொருள் இல்லாமையே. இப்பொருள் இாைப்பையில் உற். பத்தியாகி கல்லீரலில் சேமித்து வைக்கப்பெறுகின்றது. கல்விசலை அல்லது கல்லீரல் சாரத்தை உட்கொண்டால் சிவப்பு அனுக்களே உற்பத்தி செய்யும் சாதாரண நிலையைக் ரும்பவும் அடையலாம். குருதிச் சோகை என்பது சாதா ாணமாக நேரிடக்கூடிய நோய் ; இக்குறையின் காரணமாகப் பல நோய்கள் பின்தொடரக் கூடும். ஆல்ை, அதிர்ஷ்டவச மாக சிவப்பு அணுக்களைக் கிரும்பப் பெறுவது முடியக் கூடிய செயலாகவுள்ளது ; குருதிச் சோகை நீங்கியதும் அவ்வனுக்கள் தாமாகவே உண்டாகின்றன. குருதியிலுள்ள வெள்ளே யனுக்களே லுகோசைட்டிஸ் என்று வழங்குவர். அவற்றில் பலவகை உண்டு(படம் 14). பல

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மானிட_உடல்.pdf/46&oldid=866447" இலிருந்து மீள்விக்கப்பட்டது