பக்கம்:மானிட உடல்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 மானிட உடல் றன. இன்னும் அவை புரியும் செயல் தெளிவாகப் புலனுக வில்லை. ஆனல், எல்லாப் பொருள்களும் இருக்கும்பொழுது எல்லாக் காலத்தில் குருதி உறையாதிருப்பதேன் அதற்குப் பல காரணங்கள் உள்ளன. த்ரோம்போகினேஸ் விடுவிக்கப் பெறுவதற்கு த்ரோம்போசைட் பல பகுதிகளாகச் சிதைய வேண்டும். குருதி காடு முரடான வழியில் செல்லும் பொழுது அச்சிதைவு நேரிடுகின்றது. இதைத் தவிர, குருதி யிலுள்ள ஆண்டிக்ரோம்பின் என்ற பொருள் க்ரோம்பின் புரியும் செயலுக்கு எதிராகச் செயல் புரிகின்றது. மூன் ருவது அம்சம் ஒன்று உண்டு. அது இது குருதியுறை தல் நடைபெறுங்கால், அவற்றின் நூல்களில் த்ரோம்பின் உறிஞ்சப் பெற்று மேலும் கிரியை நடைபெருது அகற்றப் பெறுகின்றது. குருதி உறைதலுக்குக் காரணமாகவும் அதற்கு எதி ாகவும் உள்ள அம்சங்கள் சரிக்குச் சரி இருப்பதனுல்தான் குருதி பாய்மத்தன்மையுடன் குழாய்மண்டலம் வழியாகப் பாய்ந்து செல்லுகின்றது. கால்களிலுள்ள வடிகுழல்களில் அமுக்கம் குறைவாக இருப்பதால் சிறப்பாகக் குருதியுறை தல்கள் அங்கு நடைபெறுகின்றன. தொற்று நோயால் பாதிக்கப்பெற்ற இடத்திலும் வடிகுழலில் ஏற்படும் அமுக் கத்தாலும் அவை தோன்றினும் கோன்றலாம். சத்திர சிகிச்சையின் காரணமாகச் சில குருதியுறைதல்கள் வள்ர்ச்சி பெறக் கூடும். எனினும், சிலவித மருந்துச் சரக்குகளைக் கொடுத்து அவை உண்டாதலைத் தடுத்து கிறுக்கக் கூடும். பாய்மமாகவுள்ள பிளாஸ்மாவில் குருதியணுக்கள் மிதக் கின்றன. அவ்வனுக்களைப் பிளாஸ்மாவிலிருந்து பிரித்து விட்டால் பிளாஸ்மா இள மஞ்சள் நிறமுள்ள ஒரு நீர்போல் காணப்படும். கரைசலாக இருக்கும்பொழுது அதில் பல் வேறு பொருள்கள் இருக்கும். அவற்றின் விவாங்களேயெல் லாம் அறிந்துகொள்ளுதல் சலிப்புத் தாக் கூடியது. பிளாஸ் மாவிலுள்ள முக்கியமான தொகைக் கூறுகளைப் பின்வருமாறு வகைப்படுத்தலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மானிட_உடல்.pdf/52&oldid=866461" இலிருந்து மீள்விக்கப்பட்டது