பக்கம்:மானிட உடல்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 மானிட உடல் குருதி வகைகள் முதலாவது உலகப் பெரும் போர் நடைபெறுங்கால் பொதுவாகக் குருதி பாய்ச்சும் செயல்களின் இன்றியமை யாமையை ஒரளவு அறிந்திருந்தனர். திடீரென்று அதிக அளவு குருதியை இழந்தால் உயிருக்கு ஆபத்து என்பது எல்லோருக்கும் தெரியும். ஒருவர் ஒரு பின்ட் அல்லது இாண்டு பின்ட் அளவு குருதியை உதவக் கூடுமானல் அத னேக்கொண்டு நோயுற்று இருப்பவர் அல்லது காயப்பட் டுள்ளவரின் உயிரைக் காப்பாற்றலாம் என்பதைத் தெரிந் திருந்தனர். இவ்வாறு நோயாளியின் எலும்பு மச்சை சிவப்பு அணுக்களைத் தேவையான அளவுக்கு உற்பத்தி செய்துகொள் ளும்வாையில் குருதி புகட்டும் செயல் நடைபெறவேண்டும். போர்க் காலத்திலும் சரி அமைதியான பொது வாழ்வி லும் சரி, குருதி புகட்டும் செயல் வரவர அதிகமாகிக் கொண்டு வருகின்றது. எனினும், குருதிக் கொடையாளி தரும் குருதி நோயாளியின் குருதியுடன் பொருந்துகிறதா என்பதை நன்கு உறுதிப்படுத்திக்கொள்வதில் எச்சரிக்கை யுடன் நடந்துகொள்ள வேண்டும். முதலாம் உலகப் பெரும் போருக்கு முன்னதாக லாண்ட்ஸ்டினர் என்பாரும் பிறரும் தாம் ஒவ்வொருவரும் கொண்டுள்ள குருதி வகைகளைக் கண்டறிவதில் ஆராய்ச்சி நடத்தினர். இன்று அத்துறையில் வேறு பல அம்சங்கள் கண்டறியப் பெற்றிருப்பினும், லாண்ட்ஸ்டினர் கண்டறிந்த குருதி வகைகளே முக்கியமான வையாகக் கருதப் பெறுகின்றன. குருதிக் கொடையாளி யின் குருதி நோயாளியின் குருதியுடன் பொருந்துகிறதா என்பதை நிர்ணயிப்பதற்கு ஒரு சோதனை செய்யப்பெறுதல் வேண்டும். அஃதாவது குருதிக்கொடையாளியின் ஊனீரை (நிணநீரகம் இல்லாத பிளாஸ்மா) நோயாளியின் குருதியி லுள்ள செவ்வனுக்களுடன் சேர்த்து அவ்வுயிரனுக்கள் ஒன்ருேடொன்று ஒட்டிக்கொள்ளாதிருக்கின்றனவா என்ப தைப் பார்க்க வேண்டும். உடலெங்குமுள்ள சிவப்பு அணுக் கள் ஒன்ருேடொன்று சேர்வதாக இருந்தால், அவற்றுள் பல சிதைதல் கூடும்; பல திரட்சிகள் சிறிய நுண்புழைகளே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மானிட_உடல்.pdf/54&oldid=866465" இலிருந்து மீள்விக்கப்பட்டது