பக்கம்:மானிட உடல்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குருதியும் நிணநீரும் 47 அடைத்துவிடும் ; குருதியைப் பெற்ற நோயாளி கடுமையான நோய்க்கு ஆளாக நேரிடும். சிவப்பு அணுக்களும் ஊனீரும் கொண்டுள்ள ஒன்று சேர்க்கும் அம்சங்களைப் பொறுத்துக் குருதி நான்கு வகை யாகப் பிரிக்கப்பெற்றுள்ளது. அவை வருமாறு : வகை A : சிவப்பு அணுக்களில் A என்ற ஒட்டும் அம்சமும் ஊனீரில் எதிர்-B என்ற அம்சமும் இருக்கும். வகை B: சிவப்பு அணுக்களில் B என்ற ஒட்டும் அம்சமும், ஊனீரில் எதிர்-A என்ற அம்சமும் இருக்கும். 6,6553, AB : சிவப்பு அணுக்களில் A என்ற ஒட்டும் அமச மும் B என்ற ஒட்டும் அம்சமும் இருக்கும் , ஆல்ை ஊனிரில் இரண்டு அம்சங்களும் இல்லாகிருக்கும். வகை o : சிவப்பு அணுக்களில் ஒரு அம்சமும் இராது ; ஆனல் ஊனீரில் ஒன்று சோாக எதிர்-A என்ற அமச மும் B என்ற அம்சமும் இருக்கும். ஒருவருடைய குருதி A அல்லது B அல்லது AB வகை யில் அடங்கினல் அதே வகை குருதியைக் கொண்டவர் உடலில்தான் அதனைப் புகுத்துதல் வேண்டும். வகை O குருதியை அவசரத்தின் பொருட்டு யாருக்கு வேண்டுமான லும் புகுக்தலாம். அவ்வகைக் குருதியிலுள்ள சிவப்பு அணுக்களில் எந்த அம்சங்களும் இராததாலும் ஊனீரிலுள்ள அம்சம் அவ்வளவு முக்கியமாக இல்லாததாலும், அதை உப யோகப்படுக்கலாம். இக் காரணத்தால்தான் வகை () குருதி யைக் கொண்டவர் அனைத்துலகக் கொடையாளி என்று வழங்கப் பெறுகின்ருர் நம் மக்கள் கூட்டத்தில் பெரும்பா லோர் இவ்வகைக் குருதியையுடையவர்களாக உள்ளனர். குருதி ஒன்றுபோல் உள்ளது என்று கருதுவதற்கு முன்னர் ஒட்டும் வேருெரு அம்சமும் சோதிக்கப் பெறுகின் றது. இது Rh என்று வழங்கப் பெறும் அம்சமாகும். Rhesus grešili si ஒரு வகைக் குரங்கு ; முதன் முதலாக அந்த அம்சம் அந்த வகைக் குரங்கினிடம் கண்டறியப்பெற்ற தால் அதன்பெயரில் முதல் இரண்டெழுத்தாகிய Rh என்ப

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மானிட_உடல்.pdf/55&oldid=866467" இலிருந்து மீள்விக்கப்பட்டது