பக்கம்:மானிட உடல்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 மானிட உடல் தாலேயே அந்த அம்சமும் வழங்கப்பெறுகின்றது. நம்மில் 85 சதவிகித மக்கள் இந்த அம்சத்தையுடைய குருதியைக் கொண்டவர்கள் ; இவர்களே Rh பாஸிட்டிவ் என்று குறிப் பிடுவது வழக்கம். எஞ்சிய 15 சதவிகித Rh நெகட்டிவ் குருதியைக் கொண்டவர்களுக்குக் குருதிபுகட்டுதல் தேவைப் பட்டால் Rh பாஸிட்டிவ் குருதியைப் பெறக் கூடும். அதல்ை அவர்கள் கூச்சமுடையவர்களாக ’ ஆதல் கூடும் : மீண்டும் ஒரு முறை Rh பாஸிட்டிவ் குருதியைப் புகுத்தி ல்ை அதல்ை அவர்கள் உடலிலுள்ள சிவப்பு அணுக்கள் அபாயகரமான அளவு சிதைதல் கூடும். மேற்கூறியவற்றுடன் ஒப்பிடப்புகின் குருதிப் புகுத்த லில் ஒட்டுதலை விளைவிக்கும் வேறு அம்சங்கள் அரியவை : எனவே, அவற்றைக் காண்பதற்கென பொதுவாகச் சோத னேகள் செய்வது நடைமுறையில் இல்லை. பாய்மப் பரிமாற்றம் உடலிலுள்ள எல்லா இழையங்களும் ஈரமாக உள்ளன. உயிரணுக்கள் கூட பாய்மங்களைக் கொண்டவை. அவை இழையப் பாய்மத்தில் அமிழ்ந்துகிடக்கின்றன. குருதிக்கும் உடல் இழையங்களுக்கும் இடையே சதா பாய்ம ஒட்டம் நடைபெற்றுக்கொண்டே யிருக்கின்றது ; இதல்ை கரைக் துள்ள பொருள்களின் பரிமாற்றம் நடைபெறுவதற்குத் துணையாக உள்ளது. குருதிக்கும் இழையத்திற்கும் இடையே நடைபெறும் பாய்மப் பரிமாற்றத்தை நடத்துவதில் இாண்டு முக்கிய ஆற்றல்கள் பங்கு கொண்டுள்ளன. ஒன்று, குருதி யின் நீர்ம அமுக்கம் , அஃதாவது, நுண்புழைச் சுவர்வ யாக இழையத்திற்குள் பாய்மத்தைச் செலுத்தும் ஆற்றல். அது இதயத்துடிப்பின் ஆற்றலையும், குருதியின் பரிமாணத தையும், உடல் நேர்நிலையிலுள்ளபொழுது குருதிப் பிழம்பின் எடையையும் பிற அம்சங்களையும் பொறுத்துள்ளது. இந்த நீர்ம அமுக்கத்தால் ஏற்படும் ஆற்றலைத் தடுத்து சமநிலையாக்கக் கூடிய மற்ருெரு ஆற்றல் சவ்வூடு பாவும் அமுக்கமாகும் ; இவ்வாற்றலால் இழையங்களிலுள்ள நீர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மானிட_உடல்.pdf/56&oldid=866469" இலிருந்து மீள்விக்கப்பட்டது