பக்கம்:மானிட உடல்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப் புரை ஒரு நாட்டின் முன்னேற்றமும் சுபீட்சமும் அந்த காட்டின் அரசியல் சுதந்திரத்தை மட்டும் பெர்றுத்ததாக இல்லை. இருபதாம் நூற்ருண்டின் இன்றையச் சூழ்நிலை யில், விஞ்ஞான அறிவையும் அந்த அறிவை அன்ருட வாழ்க்கையில் பயன்படுத்துவதையும் பொறுத்தே ஒரு காட்டின் முன்னேற்றமும் சுபீட்சமும் இருக்கின்றன் என்று துணிந்து கூறலாம். இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ், ருஷ்யா, ஐக்கிய அமெரிக்க நாடுகள், ஜப்பான் முதலிய நாடுகள் விஞ்ஞானத் துறையிலும் அதன் பயனுய்த் தொழில் அபிவிருத்தித் துறை யிலும் அபரிமிதமான முன்னேற்றம் அடைந்துள்ளன ; இந்த நாடுகளில் எல்லாம் விஞ்ஞானக் கல்வியை, உயர் கிலைப் பள்ளியிலிருந்து பல்கலைக் கழகப் படிப்புவரை, அங் தந்த நாட்டின் காய்மொழி மூலம்தான் சொல்லிக் கொடுக் கிரு.ர்கள். இங்கிலாந்தில் சகலவிதமான போதனைகளும், ஆங்கில மொழிமூலமே போதிக்கப்பெறுகின்றன. ருஷ்யா விலும் மற்ற நாடுகளிலும் அப்படித்தான். அதனுல் அந்த நாடுகளில் எல்லாம் விஞ்ஞானமும் விஞ்ஞானம் பற்றிய அறிவும் விரைவில் வளர்கின்றன; எளிதில் பரவுகின்றன. நம் நாட்டில், குறிப்பாகத் தமிழ்நாட்டில், கிலேமை அப்படி இல்லை. நாம் அரசியல் சுதந்திரம் பெற்றிருப்பது உண்மைகான் ; ஆயினும், அறிவுச் சுதந்திரம் நமக்கு இன்னும் கிட்டிய பாடாக இல்லை. நாம் பெற விரும்புகிற, போதிக்க விரும்புகிற விஞ்ஞான அறிவுகளை எல்லாம், நம் தாய்மொழி மூலம்ே அல்லாமல், வேற்று மொழியான ஆங் கில மொழி மூலமே பெற வேண்டியதாக இருக்கிறது. ஆங் கிலேயர்களின் அரசியல் பிடிப்பிலிருந்து விடுதலைபெற்று விட்ட நாம், அவர்களின் தாய் மொழியான ஆங்கிலத்தின் பிடிப்பிலிருந்து இன்னும் விடுதலை பெற முடியாமல், விடுதலை பெறுவதற்கு வழியும் தெரியாமல் அந்த மொழிக்கு அடிமைப்பட்டுக் கிட்க்கிருேம்; அப்படிக் கிடப்பதை பெரு மையாகக் கருதுபவர்களும் நம்மிடையே இருக்கிரு.ர்கள். இந்த நிலையில் மாற்றம் ஏற்பட்டால்தான், ஆங்கிலத் தின் பிடிப்பிலிருந்து விடுதலை பெற நாம் முயற்சி எடுத்துக் கொண்டால்தான், நம் தாய்மொழியான தமிழ் மொழி வளரும் ; நாடும் முன்னேற்றம் அடையும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மானிட_உடல்.pdf/6&oldid=866477" இலிருந்து மீள்விக்கப்பட்டது