பக்கம்:மானிட உடல்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூ ச் சு று ப் பு: ம ண் ட ல ம் சுவாசித்தல் இதயத் துடிப்பு, குருதியோட்டம் ஆகியவற்றைப் போலவே, சுவாசித்தலும் உயிரைப் பாதுகாப்பதற்கு மிகவும் இன்றியமையாதது. உடலிலுள்ள ஒவ்வொரு உயிரணுவும் முக்கியமாகச் செயற்படுவதற்கு உயிரியம் தொடர்ந்து தேவைப்படுகிறது. இது வளர்சிதை மாற்றத்தை ஆராயுங்கால் நன்கு விளக்கப்பெற்றுள்ளது. நுரையீரல் மூலம் இழுக்கப் பெறும் காற்றிலிருந்து உயிரியம் கிடைக்கின்றது. பாய்குழல் களிலுள்ள குருதியின் வழியாக அது உடலில் ஊடுருவிப் பாவுகின்றது ; அதற்குப் பதிலாக கரியமில வாயு என்ற கழிவு வாயு அதன் இடத்தைப் பெறுகின்றது. இந்த வாயு நாளக் குருதி வழியாக நுரையீரலுக்குத் திரும்பவும் வந்து வெளியில் அகற்றப் பெறுகின்றது. ஒருசில நிமிடங்கள் மூச்சடைத்துத் திக்குமுக்காடிக் கடைப்பட்டாலும் மரணம் நேரிடும். காரணம், சுவாசித்தலை மேற்கொண்டுள்ள மூளை யின் பகுதி திரும்பவும் இயங்கத் தொடங்காது. எனினும், இடையில் சென்ற நேரம் மிகவும் அதிகம் இல்லாவிட்டால், செயற்கை முறை சுவாசிக்கலால் கிரும்பவும் இயல்பான அசைவுகளை உண்டாக்கி உயிர் வாழச் செய்துவிடலாம். சாதாரணமாக நாம் உள்ளிழுக்கும் மூச்சிலுள்ள காற் றில் உயிரியம், காலகம், கரியமிலவாயு, நீராவி ஆகியவைகளும்

  • எட்டாம் அதிகாாம்.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மானிட_உடல்.pdf/60&oldid=866479" இலிருந்து மீள்விக்கப்பட்டது