பக்கம்:மானிட உடல்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூச்சுறுப்பு மண்டலம் 53 இாம் வாழுமிடங்களிலுள்ள எல்லாவித புகைகளும் கிடப் பொருள் துணுக்குகளும் இருக்கின்றன. ஆனால், சுவாசிக்கம் கிரியை மூலம் சில மருந்துச் சாக்குகளையும் வாயு வடிவத்தில் உள்ளுக்குச் செலுத்தலாம். சத்திர சிகிச்சையின்பொழுது பொதுவாக உணர்ச்சி நீக்கத்தை உண்டாக்குவதில் இம் முறைதான் முதன் முதலாகப் கையாளப்பெற்றது , இன்றும் இம் முறை நடைமுறையிலிருந்து வருகிறது. நன்முறையில் பயிற்சி பெற்றவர்தான் ஒரு வாயுவை நுரையீரலினுள் செலுத்தி, அதன் பிறகும் உயிரணுக்கள் தேவையான அளவு உயிரியத்தைப் பெறும் நிலையை உண்டாக்க முடியும். மூச்சுறுப்பு மண்டலத்தை இரண்டு முக்கிய பிரிவுகளா கக் கருதலாம். முதற் பிரிவு அல்லது மேற்பிரிவு காற்றைச் செலுத்தி அகன் பயனுகக் குரலை உண்டாக்குகிறது. அதில் மூக்கு, முன்தொண்டை, குரல்வளை, மூச்சுக்குழல், மூச்சுக் கிளைக் குழல்கள் ஆகிய உறுப்புக்கள் அடங்கி, முகத்தி லிருந்து கழுத்து வழியாகவும் மார்பின் நடுப் பகுதி வழியாக வும் மிக ஆழத்தில் நுரையீரலின் இறுதிப் பகுதியாகவுள்ள மிகச் சிறிய மூச்சுக் கிளைக் குழல்கள் வரையிலும் தொடர்ச் யுள்ள வழிகளைக்கொண்டுள்ளன. (புகைப் படம் சு-யும் புகைப் படம் எ-யும் பார்க்க.) மூச்சுறுப்பு மண்டலத்தின் இரண்டாம் பிரிவு, காற்றை வாங்கிக்கொண்டு பல வாயுக்களைத் திரும்பத் தருகின்றது. இச்செயல் கடற்பஞ்சுபோன்றுள்ள நுரையீரலின் அமைப்பு முழுவதிலும் நடைபெறுகின்றது ; கடற் பஞ்சுபோன்ற இந்த அமைப்பு நெஞ்சகத்தின் இரு புறங்களிலுமுள்ள குழியறையின் பெரும் பகுதியை அடைத் துக்கொண்டுள்ளது. மூக்கு காற்று உயிர் வாழ்வதற்கு மிகவும் இன்றியமையாதது ; ஆனல், மக்கள் வாழும் பெரும் பகுதிகளில் அது தீங்கினை விளைவிக்கக் கூடிய பொருள்களைக் கொண்டுள்ளது. மூச் சுறுப்பு மண்டல வழிகளில் பாதுகாப்புடன் தடுக்கக் கூடிய செயல் நடைபெருவிடில் நுரையீரல் தொடர்ந்து பழு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மானிட_உடல்.pdf/61&oldid=866481" இலிருந்து மீள்விக்கப்பட்டது