பக்கம்:மானிட உடல்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூச்சுறுப்பு மண்டலம் 55 வுள்ள மூன்ருவது அமைப்பு மிக நுட்பமான உரோமங்கள் போல் நீட்டிக்கொண்டிருக்கும் மூச்சுக் குழல்களிலுள்ள பிசிர்களாகும். அப் பிசிர்கள் மெல்லிய தோலின் மேற்புற மாகவுள்ள உயிரணுக்களின்மீது படர்ந்துள்ளன ; அவை சதா துடித்துக்கொண்டே யிருக்கும். தூசுகளே முன்நோக்கி வெளியே தள்ளுவதில் இப் பிசிர்கள் மிகத் திறனுடன் செயலாற்றுகின்றன. ஆனல், மூக்கில் அடிக்கடி கொற்று நோயால் துன்புறுவோர் அறியாமையின் காரணமாகச் சிறி தும் சிந்தனையின்றி மூக்குக் துவாாங்களில் சில பொருள் களைப் பயன்படுத்துகின்றனர். இவ்வாறு செய்வது பிசிர்கள் செயலாற்றுவதைக் குறைப்பதுடன், தொற்று பாவுவதற் கும் துணையாக இருக்கிறது. மூக்கிலுள்ள சளிச் சவ்வில் ஏராளமான நுண்புழைகள் பாவியுள்ளன. அவற்றில் இளஞ் சூடான குருதியொழுக்கு பாவுகின்றது ; இந்தக் குருதி நாம் சுவாசிக்கும் காற்றின் குளிர்ச்சியைத் திறனுடன் குறைத்துவிடுகிறது. ஆனல், நமக்குச் சளி பிடித்திருக்கும்பொழுது இந்த நுண்புழைகள் விரைவில் ஒன்ருகத் திாண்டுவிடுகின்றன. அப்பொழுது புடைத்துக் கொண்டுள்ள மேல் தோல் மட்டிலும் மூக்கு வழியை அடைத்துவிடக் கூடும். மூக்கினுள் மருந்துக்களைத் தாவுவதாலும் கடவுவதாலும் இந்த நுண்புழைகள் சுருக்க மடைவதுடன் அவற்றின் அழற்சியும் வீக்கமும் குறையக் கூடும். முக எலும்புகளில் மூக்குக் குழியிலிருந்து தொடர் புள்ள பைகள் உள்ளன ; அவற்றை உள்ளறைகள்" என வழங்குவர் ; அவை மூக்கிலுள்ள எலும்புகளைப் போலவே பிசிர்த் தசையால் போர்த்தப் பெற்றுள்ளன. (புகைப்படம் சு-ஐப் பார்க்க : படம் 18.) தூசுகளைக் கழுவிக் காப்பதற் காக இந்த உள்ளறைகளும் சுரப்பு நீர்களேச் சுரக்கின்றன. ஒர் உள்ளறையில் தொற்று ஏற்பட்டால் அதிகமாகச் சுரப்பு நீர் வெளிப்படுவதை நாம் அறிவோம்.

  • Sinuses.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மானிட_உடல்.pdf/63&oldid=866485" இலிருந்து மீள்விக்கப்பட்டது