பக்கம்:மானிட உடல்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூச்சுறுப்பு மண்டலம் 59 ஒலிகள் பிறக்கின்றன. வாயறைகளும் மூக்கு அறைகளும் ஒலியின் சில பண்புகளுக்குக் காரணமாகின்றன. உதடு களின் அசைவுகளும் நாக்கின் அசைவுகளும் சொற்களைச் செம்மையுடன் உருவாக்குவதில் பெரும் பங்கு கொள்ளு. கின்றன. மூச்சுக் குழல் என்பது (படம் 20) குரல்வளையிலிருந்து மூச்சுக் கிளைக் குழல்கள் வரையிலும் சிக்கலில்லாத ஒரு நோான குழல் ஆகும். அதன் மேற் பகுதி கழுத்தி படம் 20. மூச்சுக் கிளைக்குழல்க ளுடன் உள்ள மூச்சுக் குழல். (முன் தோற்றம்.) (அம்புக் குறி உள்ளே இழுக் கப்பெறும் காற்று செல்லும் திசையைக் காட்டுகிறது.) 1. குரல்வளை மூடி. 2. புரிசைச் சுாப்பிக் குருத்தெலும்பு, 3. கிரிகாய்டு குருத்தெலும்பு. 4. மூச்சுக் குழல். 5. மூச்சுக்குழலின் முதல்நிலைக் கிளைகள். அள்ளது ; அது மிருதுவான புரிசைச் சுரப்பியாலும் தசைக ளாலும் போர்த்தப் பெற்றுள்ளது. மூச்சுக்குழலின் சுவர்கள் உறுதியான குருத்தெலும்பு வளையங்களால் ஆக்கப் பெற்றிருப்பினும், தொண்டையைப் பிடித்துப் பலமாக அமுக்கும்பொழுது அது அமுங்கக் கூடியது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மானிட_உடல்.pdf/67&oldid=866492" இலிருந்து மீள்விக்கப்பட்டது