பக்கம்:மானிட உடல்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூச்சுறுப்பு மண்டலம் 63 படம் 21. மூச்சுக் குழலின் கீழ்ப்பகுதியும் மூச்சுப் பிரிவுக் குழல்களும். 1. வலப்புற முதல்நிலை மூச்சுப் பிரிவுக் குழல். 2. இடப்புற முதல்நிலை மூச்சுப் பிரிவுக் குழல். 8. வலப்புற உடன்நிலை மூச்சுப் பிரிவுக் குழல்கள். 4. இடப்புற உடன்கிலே மூச்சுப் பிரிவுக் குழல் கள். 5. மூச்சுக் குழல். மேல் நோக்கி வெளியே தள்ளுவதில் சுறுசுறுப்பாக இருந்து எளிதில் ஊறுபடத்தக்க துரையீரல் இழையங்களைப் பாது காக்கின்றன. பிசிர்களின் செயலுடனும் சளியின் கிரியை யுடனும் இம் மூச்சுப் பிரிவுக் குழல்களில் சிறுகுடலின் புழுச் சுருக்கம் போன்றதோர் அலைபோன்ற சுருக்கம் காணப்படுகிறது . இது தடித்த பொருளே அலை இயக்கத் திசையை நோக்கி வெளியே தள்ளுகிறது. இந்தப் புழுச் சுருக்கம் இருமலின் திடீர்ப் பலனுக்குப் பதிலாக ஏற்படும் செயலாகும். காரணம், நுரையீரலின் ஆழத்தில் உண்டா கும் தூண்டலால் இருமல் மறிவினையைக் கிளப்பிவிட முடிவ தில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மானிட_உடல்.pdf/71&oldid=866502" இலிருந்து மீள்விக்கப்பட்டது