பக்கம்:மானிட உடல்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 மானிட உடல் நிறம்போன்றுள்ளன. மேற்பார்வைக்கு நுரையீரல்கள் கடற் பஞ்சுபோன்று காணப்படுகின்றன. கடற்பஞ்சை நசுக்குவதைப் போலவே அவற்றையும் நசுக்க முடியும் ; அவற்றில் காற்று கிாம்பிய பல பைகள் உள்ளன. ஆனல், நுரையீரலின் அமைப்பு கடற்பஞ்சின் அமைப்பைவிட ஒழுங்காக இருக்கிறது. மூச்சுப் பிரிவுக் குழல் மத்தின் கிளைகள் யாவும் மூச்சுச் சிற்றறைகள் எனப்படும் அரை வட்ட வடிவமுள்ள பைகளில் முடிவடைகின்றன. (படம் 23.) மூச்சுச் சிற்றறைதான் மூச்சு மண்டலத்தின் படம் 23. துரையீரலில் மூச்சுச் சிற்றறை. 1. சிறு மூச்சுக்குழல். 2. மூச்சுச் சிற்றறையின் தூம்புகள். 3. மூச்சுச் சிற்றறை. இறுதியான மூல அளவாகும் , அந்த இடத்தில்தான் காற்றும் குருதியும் ஒன்றுடன் ஒன்று கலக்கின்றன. சிற் றறைகளின் சுவர்கள் வியத்தகு முறையில் இச் செய்கைக் கேற்றவாறு அமைந்துள்ளன. அவை மிக நுட்பமானவை; ஒருசில நீளுந்தன்மையுள்ள கொல்லேஜன் நார்களுடன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மானிட_உடல்.pdf/90&oldid=866540" இலிருந்து மீள்விக்கப்பட்டது