பக்கம்:மானிட உடல்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 மானிட உடல் பெற்றுவிடும். காரணம், அங்கு அதன் அழுத்தம் சிறிதளவும் இல்லை. உணர்ச்சி நீக்கத்தை உண்டுபண்ணும் செயலில் கையாளப்பெறும் வாயு எவ்வளவு விரைவாகக் குருதியுள் நுழைந்து மூளைக்குச் சென்று உடனே உணர்ச்சி நீக்கத்தை உண்டாக்குகிறது என்பதை நாம் நன்கு அறிவோம். வேறு செயல்கள் சுவாசித்தலால் வேறு செயல்களும் நடைபெறுகின்றன. அவை அவ்வளவு வெளிப்படையாகத் தெரிவதில்லை. உள் ளிழுக்கப்பெறும் காற்றிலுள்ளதைவிட வெளிவிடப்பெறும் காற்றில்தான் சோவியின் அடர்வு அதிகமாகவுள்ளது. ஆவி யாதலால் நீர் வெளிப்படுங்கால் இழையங்கள் குளிர்ச்சியடை கின்றன. இது இயல்பான செயல். தோலைப்போல நுரையீரல் கள் ஆவியாதலில் முக்கியமான பங்கு கொள்ளாவிடினும், அவையும் ஒரளவு துணைபுரியத்தான் செய்கின்றன ; தேவை அதிகப்படுங்கால் அவற்றின் செயலை அதிகரிக்கச் செய்யலாம். நெடுமூச் செறிகின்ற நாய் கோடை நாட்களில் ஒவ்வொரு தடவை மூச்சை வெளிவிடுங்கால் அதிகமான நீரை வெளி விட்டுத்தான் இடரைத் தீர்த்துக்கொள்ளுகின்றது. மப்பாக வுள்ள நாட்களில் நெடுமூச்செறிதலில் குறைந்த பலனைத் தான் காண முடியும். நுரையீரலினுள் ஏற்றுக்கொள்ளப் பெறும் காற்று அதிக ஈரமாக இருப்பதும் உடலிலிருந்து குறைந்த அளவு நீர் வெளிப்படுவதுமே இதற்குக் காரண மாகும. மூச்சை வெளிவிடுவதில் நாம் ஈசத்தை இழப்பதிலிருந்து உடலிலுள்ள நீரின் அளவைக் கட்டுப்படுத்துவதில் சுவாசித் தல் இயல்பாகவே துணை செய்கிறது என்பது அறியக்கிடக் கின்றது. வெப்பமான நாட்களில் தாகவிடாய் அதிகமாக இருப்பதற்குக் காரணம், உடல் மேற்பாப்பிலும் நுரையீசலி அம் அதிகமாக ஆவியாதலே. நுரையீரல்களின் செயல் குருதியின் அமில காத்தைக் கட்டுப்படுத்துவதிலும் ஒரளவு பங்குகொள்ளுகிறது. அமில தாத்தை அறிவியலார் pH என்று வழங்குவர். ஏனைய அம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மானிட_உடல்.pdf/96&oldid=866552" இலிருந்து மீள்விக்கப்பட்டது