பக்கம்:மானிட உடல்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உ ண வு ம ண் ட ல ம் உடலின் பெரும் பகுதியை அடைத்துக்கொண்டிருக் கும் நெடுங்குழல் (புகைப்படம் கo-ஐப் பார்க்க.) செரிவு மண்டலம் என்று வழங்கப்பெறுகின்றது. உறுப்புக்களுக்கு ஊட்டம் தருவதற்கு இன்றியமையாத படியாக இருப்பது செரித்தல் என்ற செயலாகும். ஆனல், செரிமானம் ஆன பொருள்கள் குருதியோட்டமும் கிணநீர் ஒட்டமும் கிரகிக் தல் அதே அளவுக்கு இன்றியமையாதது ; கவர்ச்சியுமுடை யது. உணவுப் பாதை உடலிலிருந்து அது கிரகிக்காத உண வின் கூட்டுப்பொருள்களும், பாக்டீரியாவின் பிண்டங்களும், உயிரணுக்களின் செயல்களால் உண்டான விளைவுப் பொருள் களும் உடலிலிருந்து அகற்றப் பெறுவதற்கும் கருவியாக அமைந்திருக்கின்றது. உடலெங்குமுள்ள இழையங்கள் தம்முடைய செயல் களுக்குத் தேவையான பொருள்களே அடையவும், தம்மைத் தாமே படைத்துக்கொள்ளவும், தொடர்ந்து உணவை ஏற். அறுக்கொள்ள வேண்டியிருந்தாலும், சுவாசித்தல் உடனுக் குடன் அவசியமா யிருத்தல்போல் உண்டல் உடனுக்குடன் அவசியமாக இல்லை. உயிரியம் இல்லாவிட்டால் ஒருசில கிமிடங்களில் உயிரிழப்பு நேரிடுகிறது. எனினும், சிறிதும் உணவை உட்கொள்ளாது பல வாாங்கள் உயிருடன் வாழ முடியும். செரித்தலின் விளை பொருள்கள் பல உறுப்புக் களில் சேமித்து வைக்கப்பெற்றிருப்பதால் இத்தகையதொரு பாதுகாப்பினை நாம் பெற்றிருக்கின்ருேம். வெளியிலிருந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மானிட_உடல்.pdf/98&oldid=866556" இலிருந்து மீள்விக்கப்பட்டது