பக்கம்:மானிட உடல்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உணவு மண்டலம் 75 கிாப்புதல் இல்லாதபொழுது இச் சேமிப்புப் பொருள்கள் பயன்படுத்தப் பெறுகின்றன. எனவே, உணவுமண்டலச் செயலின் உச்சநிலை, நமது உண்னும் பழக்கங்களுக் கேற்ற வாறு மாறுபடக் கூடியது. நமது உணவுப் பழக்கங்களும் உடலின் தேவையைவிட வழக்கத்தினுல் நிர்ணயம் செய்யப் பெறுகின்றன. உணவுப் பாதை பல பகுதிகளாகப் பிரிக்கப் பெற்றுள் ளது. இவை யாவும் தொடர்ந்து அமைந்திருக்கின்றன ; ஆயினும் அவை அமைப்பிலும் செயலிலும் தனித்தன்மை யைப் பெற்றிருக்கின்றன. வாய் உணவுப் பாதையின் முதற் பகுதியாகிய வாய் (புகைப் படம் கக-ஐப் பார்க்க) உணவையும் பானத்தையும் ஏற்றுக் கொள்ளும் அறை மட்டிலு மல்ல. ஒரு முக்கியமான, ஆனல் முழுவதும் அவசியம் என்று சொல்லக் கூடாத, செரித்தலின் ஒரு பகுதி வாயில் நடைபெறுகின்றது. இதற்குப் பற்களும் நாக்கும் உமிழ்நீர் சுரப்பியிலிருந்து வரும் சாறுகளுடன் சேர்ந்து பலமாக இயங்க வேண்டியுள்ளன. (புகைப்படம் கo, கஉ-ஐப் பார்க்க.) உமிழ்நீர்ச் சுரப்பிகளில் உமிழ்நீர்ப் பெருஞ் சுரப்பிகள் எனப்படும் இரண்டு சுரப்பிகள் காதின் கீழ்க்கோடி யில் தாடையின் கோணப் பகுதியில் அமைந்துள்ளன. நமக் குத் தாடை அம்மை’ ஏற்படுங்கால் இந்தச் சுரப்பிகள் தாம் விங்கிப் பலவீனமடைகின்றன. நாக்கீழ்ச் சுரப்பிகள் இரண் டும் நாவின் அடியில் முன்புறமாக அமைந்துள்ளன ; தாடைக் கீழ்ச்சுரப்பிகள் கீழ்த்தாடையின் அடியில் நடுக்கோட்டை நோக்கி இருக்கின்றன. இவ்வுறுப்புக்கள் யாவும் பெரும் பாலும் சுரக்கும் உயிரணுக்களாலானவை ; இவை தாம்பு களின் மூலம் வாய்க்குள் பல்வேறு அளவுகளில் செரிமானத் திற்குரிய கரைசலை வெளிப்படுத்தக் கூடியவை. அவை சதா சிறிய அளவுகளில் சுரந்துகொண்டே யிருக்கும் ; ஆனல், மனத்தைக் கவசக்கூடிய உணவின் தோற்றத்தாலோ அல்லது அதன் மணத்தாலோ அதிக அளவு நீர்களேக் கொட்டக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மானிட_உடல்.pdf/99&oldid=866558" இலிருந்து மீள்விக்கப்பட்டது