பக்கம்:மானுடம் வென்றது (கட்டுரைகள்).pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்புரை எழுத்தாளர்களின் நன்மைக்காக எழுத்தாளர்களின் களின் சொந்த முயற்சியால் எழுத்தாளர்களே நடத்தி வருவது தமிழ் எழுத்தாளர் கூட்டுறவுச் சங்கம். இதுவரை யில் பதினெட்டு நூல்கள் வெளியாயின. மானுடம் வென்றது. பத்தொன்பதாவது நூலாகும். தமிழ் உறவு என்ற சுருக்கமான பெயரைப் பெற்ற இக்கூட்டுறவுச் சங்கத்தின் வெளியீடுகளைப் பல நிறுவனங்களும் தமிழ் மக்களும் ஆதரித்து நலம் செய்வதால் மேலும் மேலும் பல நூல்களை வெளியிட வேண்டும் என்ற ஊக்கம் எங் களுக்கு உண்டாகியிருக்கிறது. நல்ல நூல்-பயனுள்ள நூல் என்று யாவரும் பாராட்டும் சிறப்பைத் தமிழுறவு நூல்கள் பெற வேண்டும் என்பது எங்கள் அவா. இந்தச் சங்கம் பெரிய வெளியீட்டு நிலையங்களைப் போல் விளம்பரம், பிர சாரம் முதலிய துறைகளில் பணம் செலவழித்து விற்பனையை மிகுதிப்படுத்திக் கொள்ளும் நிலையில் இல்லை. எழுத்தாளர்களின் சொந்த முயற்சி, தரமான வெளியீடுகள் என்ற இரண்டையே எங்கள் தகுதியாகக் கொண்டு நூல்கள் வெளியிடத் தொடங்கியிருக்கிருேம். மக்களின் ஆதரவு மிகுதியாக ஆக எங்கள் முயற்சி விரிந்து பரந்து யாவருக்கும் நலந்தரும் என்பதில் ஐயமே இல்லை. ஒரு பதிப்புக்கு இரண்டாயிரம் படிகள் வெளியிட்டு அவற்றை ஒர் ஆண்டுக்குள் விற்றுவிட வேண்டும் என்பது எங்கள் அவா. இது நிறைவேற முடியாத பேராசை அன்று. நூல் நிலையங்களும் கல்வி நிறுவனங் களும் பஞ்சாயத்து ஒன்றிப்புகளும் இந்த வெளியீடுகளை