பக்கம்:மாபாரதம்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

98

மாபாரதம்

வேண்டும் என்ற ஆவல் தனக்கிருப்பதாக நாரத முனிவனிடம் கூறியதாகவும், அந்நற்செய்தி நவில அங்கு வந்ததாகவும் அவர்களிடம் நவின்றான். அருகிருந்த கன்னனும் பெருகி வரும் புகழுக்கு இராசசூய யாகம் தேவை என்பதை வற்புறுத்தினான்.

சராசந்தன் வதம்

எட்டுத் திக்கும் சென்று தன் வெற்றிக் கொடியை நாட்ட வேண்டிய பொறுப்பு அவர்களை வந்து சார்ந்தது. அதற்கு முன்னால் நீண்ட நாட்களாகவே ஒழித்துக்கட்ட விரும்பிய சராசந்தனை அழித்து முடிக்க உடற்பருத்த வீமனும் விற்பிடித்த விசயனும் கண்ணனுக்குத் துணை சென்றனர்.

சராசந்தனின் அரசவை மண்டபத்துக்கு இம் மூவரும் அந்தணர் வேடத்தில் அனுமதி கேட்காமலேயே நுழைந்தனர். அவர்களை உற்றுப்பார்த்தான். மார்பில் நூல் இருந்தும் அந்தணர்களுக்கு இருக்க வேண்டிய தொந்தியும் நைந்த தோள்களும் காணப்படவில்லை. தோள்களிலும் விரல்களிலும் தழும்புகள் இருந்தன. அவர்கள் விழுமிய வீரத்தை அலை விளம்பிக் கொண்டு இருந்தன. சரா சந்தன் அவர்கள் சரித்திரத்தை அறிய விரும்பினான்.

“அந்தணர் கோலத்தில் அவைக்களம் அணுகிய காளையரே! நீவிர் யார்” என்று கேட்டான். துவாரகை வேந்தனும் பாண்டுவின் மைந்தர்களும் “கண்ணன், வீமன், அருச்சுனன்” என்று பள்ளிப்பிள்ளைகள் போல் தம் பெயர்களை வரிசையாகக் கூறினர். வாயிலர் தடுப்பர் என்பதால் காவலை மீறி இவ்வேடத்தில் வந்ததாக அறிவித்தனர்

“கண்ணன் துவாரகையில் ஒளிந்தவன்; அருச்சுனன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாபாரதம்.pdf/101&oldid=1036105" இலிருந்து மீள்விக்கப்பட்டது