பக்கம்:மாபாரதம்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராசீ

99

இளையவன்; வீமன் அவர்களுள் தன்னோடு சமர் புரியத்தக்கவன் என்று கூறி அவனை மற்போருக்கு அழைத்தான். கற்போர் கூடிய அவையை நீங்கி நற்போர் செய்யக் கூடிய நடு இடத்தை நாடினர்.

தன் மகனை மாமன்னன் என்று மகுடம் சூட்டி விட்டுத் தான் இறப்புக்குத் துணிந்து பொறுப்பை அவனிடம் தந்து விட்டுப் புகழை விரும்பி அடுகளம் வந்து சேர்ந்தான். இரு பெரு யானைகள் மதம் கொண்டு அதம் செய்ய இயங்கியது போல இருவரும் தாக்கிக் கொண்ட னர். கட்டிப்புரண்டு மண்ணில் தள்ளி மார்பில் குத்தி அவர்கள் பெரும்சத்தம் செய்தனர். மாறிமாறி மண்ணைக் கவ்விக் கொண்டு விண்ணுக்குச் செல்லும் வழி கேட்டுப் பயணத்துக்குத் தயாராகிக் கொண்டு இருந்தனர். வீமன் அவன் உடலை இருகூறாக ஆக்கி வேறு வேறாக இட்டான். உடற் கூறுகள் இரண்டும் பசையால் ஒட்டிக் கொண்டதுபோல அவை இரண்டும் மறுபடியும் ஓர் உடம்பாக இயங்கியது. மீண்டும் போர் தொடங்கியது. வீமன் அவனை எப்படிக் கொல்வது என்று தெரியாமல் குழப்பத்தில் ஆழ்ந்தான். சாமள வண்ணனாகிய கண்ணன் புல் லொன்று எடுத்துப் பிளந்து மாறியிட்டுக் காட்டினான். பிளவுபட்ட சராசந்தனின் உடம்பு மறுமடியும் கூடவே இல்லை, அந்த மாமிசப் பிண்டத்தை அசைத்து உயிர் நீக்கிய நிலையில் வீமன் இசை கொண்டான்.

பிளந்தது மீண்டும் பிணைப்புண்டது கண்டு அனைவரும் வியப்பு அடைந்தனர். வீமனும், விசயனும் அதன் வரலாற்றைக் கண்ணனிடம் கேட்டு அறிந்தனர். அவன் அச்சராசந்தனின் பிறப்பு வரலாற்றின் சிறப்பினைக் கூறிப் பழைய ஏடுகளைப் புரட்டிக் காட்டினான்.

மகத நாட்டுப் பூபதியாக விளங்கியவன் பிருகத்ரதன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாபாரதம்.pdf/102&oldid=1036106" இலிருந்து மீள்விக்கப்பட்டது