பக்கம்:மாபாரதம்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

128

மாபாரதம்

கிறது? சிறைக் கைதிகள் என்றால் அவர்களை அடைத்து வைக்கலாமே தவிர அடக்கி வைக்க முடியாது”.

“அடிமைகள் என்றுமே அடிமையாக இருப்பது இல்லை. புரட்சிக்கனல் எழுந்தால் உங்கள் புரட்டுகள் பொசுங்கி விடும். இந்த மருட்டுகளை விட்டு ஆண்மையோடு நடந்து கொள்ளுங்கள். பேடிகளைப்போல அவர்களைக் கட்டிப்போட்டுவிட்டு மல்யுத்த வீரர்கள் என்று நீங்கள் வாய்கிழியச் சொன்னால் அது குதர்க்கம் ஆகுமே தவிர தருக்கம் ஆகாது. பெண்ணடிமை செய்த காலம் போச்சு; வாதில் பெண் ஆட்சி செய்யும் காலம் இது ஆச்சு; இந்திரன்தான் ஆட்சித் தலைவன் என்பது பழைய பேச்சு; இந்திராணியும் மாட்சிக்குரிய தலைவியாவது இன்றைய மூச்சு, கண்ணகியின் வீர முழக்கம் பசண்டியன் ஆட்சியைக் காற்றாடியாகப் பறக்கவிட்ட கதையைப் படிக்காதது உம் குறை”.

“பெண் தன்னைச்சூதில் இழந்தவளாக இருக்கலாம்; எளிதில் அவளை வென்று விடமுடியும் என்று பகற்கனவு காணாதீர்கள். அவள் யார் என்பதைப் பற்றி இங்குப் பேச வரவில்லை. அல்லல் உறுபவள் இவள். பெண்ணுக்கு இழைக்கும் கொடுமையை இனி இந்த மண்ணுக்குத் தாங்கும் சக்தி இருக்காது. மனித உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் என்று மதி படைத்த எவரும் முழக்கம் செய்வார்கள்” என்று எடுத்து உரைத்தான்.

கன்னன் எழுந்தான்; விகர்னனைக் கடிந்தான். சின் னப்பயல் நீ; உன்னை யார் இங்கு வாய் திறக்கச் சொன் னது? அனுபவம் இல்லாத ஆத்தி சூடி நீ; கொன்றை வேந் தன் என்றால் அது கொத்தவரங்காய் என்று தான் நீ அறிவாய்; பெரியவர்கள் கூடி இருக்கும் இப்பெருமை மிக்க பேரவையில் பேசுவதற்கு உனக்கு யார் வாக்குரிமை தந்தார்கள்? இளைஞர்கள் நீங்கள் இட்டபணி செய்யலாமே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாபாரதம்.pdf/131&oldid=1036993" இலிருந்து மீள்விக்கப்பட்டது