பக்கம்:மாபாரதம்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராசீ

133

செய்யுங்கள்; ஒராண்டு மறைந்திருந்து வாழுங்கள்; அதற்குப்பிறகு நாட்டு உரிமை உங்களை வந்து சேரும், படை திரட்டத் தேவையில்லை” என்று கூறினான்.

உடனே பெரிய மனிதர்களான வீடுமன், துரோணன் முதலியவர்கள் பகை ஆறுவதற்குப் பன்னிரண்டும் மற்றும் ஒர் ஆண்டும் போதும். அதற்குள் மனம் மாறி ஒன்றுபட வாய்ப்பு உள்ளது என்பதால் அதுவும் தக்கதே என்றனர். பாண்டவர்க்கும் படை திரட்டக் காலமும் துணையும் தேவைப்பட்டன. ஆண்டுகள் அதிகம் ஆனாலும் இழந்த நாட்டை மீண்டும் பெற முடியும் என்பதால் அதனை ஏற்றுக் கொண்டான். தருமன் தாழ்விலும் அவன் மனம் சமநிலை பெற்றிருந்தது.

4. காடுறை வாழ்க்கை

காட்டுக்குச் சென்றவர்களுக்கு வடித்துக் கொட்டிய காய்கறிச் சோறா கிடைக்கப் போகிறது? காயும்கனிகளும் தின்று காலம் கடத்தி வாழ வேண்டி நேர்ந்தது; அரங்கில் ஆடுவதற்கு அன்ன நடையினர் அங்கு இல்லை; பாடுவதற்குப் பண்ணிசை வல்ல பாவையரும் அங்குவரப் போவது இல்லை; பராசக்தியின் பாடலாகிய ‘கா கா கா’ என்று கத்தும் குரல்கள் தாம் அங்குக் கேட்க முடியும். நீச்சல் குளங்கள் உண்டு நீந்தி விளையாட; பாய்ச்சல் மான்கள் உண்டு பாவை பாஞ்சாலி பிடித்துக்களியாட; வாழ்க்கை வசதிகள் என்பவை மறுக்கப்பட்டன. தேரும் இல்லை ஊர்ந்து செல்வதற்கு, யானையும் இல்லை ஏறி உலவுவதற்கு; பரியும் இல்லை பரந்து சுற்றுவதற்கு; நட ராஜர்களாகத்தான் எங்கும் சுற்றிவர வேண்டியிருந்தது. அடிமைத்தனம் பாண்டவர்க்கேயன்றி அவர்கள் அன்னை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாபாரதம்.pdf/136&oldid=1063078" இலிருந்து மீள்விக்கப்பட்டது