பக்கம்:மாபாரதம்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராசீ

139


தான் பேடியாகிவிட்ட கேட்டினை அறிந்தான்; வெட்கிக்கொண்டு வேதனையோடு அவன்முன் சென்றான்.

இந்திரன் அறிந்தான்; அகலிகையால் தான் பெண்மை எய்தியதை நினைத்துப் பார்த்தான், ஊர்வசியால் அருச் சுனன் பேடியானது அறிந்து வருந்தினான்.

நேரே அவனை அழைத்துக் கொண்டு ஊர்வசியின் இல்லத்துக்கு ஏகினான். மன்னவனே வந்து விட்டான் என்று அவள் எழுந்தாள்.

“சாபத்தை மாற்றுக” என்று கேட்டான்.

“இங்கே யாரும் கொடுத்த சாபத்தை மாற்ற முடியாது, கூட்ட முடியுமேயன்றிக் கழிக்க முடியாதே” என்றாள்.

‘விரும்பும்போது பேடி ஆகுக’ என்று கூட்டிக் கொள்ளச் சொன்னான். அவ்வாறே கூறினாள். பேடு நீங்கித் தன் பீடு மீண்டும் பெற்றான். அதுவும் நன்மைக்கே என்று எடுத்துக் கொண்டான். தக்க தருணத்தில் பேடு உருவம் பெற்றுத் தான் மறைந்து வாழ உதவும் என்று மனம் கொண்டான்.

இந்திரபுரி அவனுக்கு அலுத்திவிட்டது. பிரச்சனைகளே இல்லாத வாழ்வில் சலிப்பு ஏற்பட்டது. காட்டில் வாழ்ந்தாலும் அதன் சுகம் வேறு; இங்கு இவர்கள் என்ன செய்கிறார்கள்? குடிக்கிறார்கள்; கூத்தடிக்கிறார்கள்; அழகிகளை ஆட வைத்து உமர்கயாம் பாடல்களுக்கு அதனை ரசனை என்கிறார்கள். தம் ஊரில் குரங்காட்டி செய்யும் வித்தைகளுக்கும் இதற்கும் அதிக வித்தியாசம் தெரியவில்லை. பால் இயல் மோகத்தில் சிக்குண்டு புலன் இயல் இன்பமே பெரிது எனப் புலம்பிக் கொண்டிருக்கும் அவ்வாழ்வு அவனுக்குப் பிடிக்கவில்லை. பசித்துப் புசித்–

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாபாரதம்.pdf/142&oldid=1048198" இலிருந்து மீள்விக்கப்பட்டது