பக்கம்:மாபாரதம்.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராசீ

145


இது போன்ற இடர்ப்பாடுகளை அவ்வப்போது அவர்கள் சந்தித்து வந்தனர்.

அதற்கப்புறம் அங்கங்கே இருந்து சில ஆசிரமங்களில் தங்கி இருந்து விட்டு அவர்கள் போட்டதைச் சாப்பிட்டு விட்டு இராமா கோவிந்தா என்று சொல்லிக் கொண்டு காலம் கடத்தினார்கள்; இப்படி ஒன்பது ஆண்டுகள் கழிந்து விட்டன.

துர்வாசமுனிவர் வருகை

மறுபடியும் அவர்களுக்கு ஒரு சோதனை ஏற்பட்டது. திரெளபதி எல்லோருக்கும் சோற்றை ஆக்கிப் போட்டுப் பானையைக் கவிழ்த்து விட்டுத் தெருவாசலில் உட்கார்ந்து கொண்டிருந்தாள். எதிர்பாராமல் ஒரு விருந்து வந்தது. வந்தவர் துர்வாச முனிவர். தருமன், வீமன், அருச்சுனன், நகுலன், சகாதேவன் அனைவரும்தான் இருந்தார்கள். துர்வாச முனிவருடன் அதிதிகள் சிலர் உடன் வந்திருந்தனர். “யாம் போய் நதி நீராடி வருகிறோம். சாப்பாடு சமைத்து ஆகட்டும்” என்று சொன்னார்.

உப்பு இருந்தால் மிளகாய் இல்லை; மிளகாய் இருந்தால் புளி இல்லை; இது போன்ற குடித்தனம் அது.

சோறு என்றால் வடித்துக் கொட்டினால் மட்டும் போதுமா! வடை, பாயசம், காரம், புளிப்பு, இனிப்பு இப் படிப் பலகாரங்களோடு போட அந்தக் காட்டிலே எப்படி முடியும்?

ஒரே திகில் ஆகிவிட்டது. என்ன செய்யப்போகிறோம் என்று ஏக்கம் காட்டினர். ஆபத்பாந்தவன் அனாத–

10

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாபாரதம்.pdf/148&oldid=1048203" இலிருந்து மீள்விக்கப்பட்டது