பக்கம்:மாபாரதம்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

146

மாபாரதம்

ரட்சகன் கண்ணனை நினைத்துக் கொண்டனர். கண்ணன் வந்தான், விஷயத்தைச் சொன்னார்கள்.

“பானையில் என்ன இருக்கிறது?” என்று கண்ணன் கேட்டான். “பருக்கை ஒன்றுதான் இருக்கிறது” என்றாள்,

இருக்கையில் இருந்து கண்ணன் அப்பருக்கையைத் தனது வாயில் போட்டான்; அவன் வயிறு நிரம்பியது. இந்த வையகம் எல்லாம் உண்டது போல் மகிழ்ச்சி கொண்டது.

உண்ணவந்த முனிவர் வயிறு நிரம்பியவராய் இவர்களை வாழ்த்தினார். “எம் வயிறு குளிர உண்டோம்” என்று கூறி மகிழ்ச்சி தெரிவித்து அதற்குப் பிறகு ஆர அமர அமர்ந்து பேசினார்.

துரியனின் அரண்மனைக்குத் துர்வாசர் போய் இருந்தார். அவருக்குச் சகல மரியாதையுடன் பிரமாதமாக உணவு படைத்து மகிழ வைத்தனர்.

அவன் படைத்த உணவு வியக்கத்தக்கதாக இருந்தது. அவர் துரியனைப் பாராட்டினார்.

“இதுபோல் நான் எங்கும் சாப்பிட்டதில்லை” என்றார் முனிவர்.

“எனக்கு ஒரு வரம் வேண்டும்” என்றான் துரியன்.

“என்ன வேண்டும்?”

“நாளைக்கு இதே நேரத்தில் பாண்டவர் தங்கியுள்ள வனத்துக்குச் சென்று போஜனம் உண்ண வேண்டும்” என்று கேட்டுக் கொண்டான்.

துர்வாசர் போனால் அவர்களால் சோறு போட முடியாது. அவருக்குக் கோபம் வரும். அவர்களைச் சபித்துவிடுவார். அவர்கள் ஒழிந்து போவார்கள்” என்று அவன் திட்டம் போட்டான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாபாரதம்.pdf/149&oldid=1048204" இலிருந்து மீள்விக்கப்பட்டது