பக்கம்:மாபாரதம்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

148

மாபாரதம்

என்ன செய்வது என்று விசயன் பதறிப்போனான். தெரிந்தால் அவ்வளவுதான். அனைவரையும் பஞ்சாமிர்தம் ஆக்கி விடுவார் முனிவர்; என்ன செய்வது! மறுபடியும் கண் ணனின் வருகை தேவைப்பட்டது. “இந்தப்பழத்தை ஒட்டி வைக்க முடியுமா? என்று கேட்டான் தருமன்.

“முடியும்” என்றான் கண்ணன்.

“எப்படி?”

“அவரவர் தம் விருப்பத்தை ஒளிவுமறைவு இல்லாமல் வெளிப்படுத்த முடியுமானால் இதையும் ஒட்டி வைக்க முடியும்” என்றான் கண்ணன்.

தருமன் உலகில் அறம் வாழ வேண்டும் என்றான்; வீமன் நல்லவனாக இருக்க விரும்புவதாகக் கூறினான்; அருச்சுனன் மானம்தான் பெரிது; அதற்காகத் தான் உயிர் விடவும் தயார் என்றான்; நகுலன் கல்வியே போதும் என்றான்; சகாதேவன் புண்ணியம் செய்ய விரும்பினான்.

திரெளபதி சொன்னாள்; “எனக்குக் கணவர்கள் ஐந்துபேர்தான் கிடைத்தனர். தகுதியுடையவன் ஆறாவது ஒருவன் கிடைத்தால் அவனையும் ஏற்றுக் கொள்ளத் தயங்கமாட்டேன்” என்றாள்.

இது ஒரு புதுக்கவிதையாகவும் இருந்தது. அதற்கு மேல் பேச்சு நீடிக்கவில்லை. பழம் மேலே சென்று ஒட்டிக் கொண்டது.

உள்ளத்தில் இருப்பதை யாரும் வெளிப்படச் சொல்ல மாட்டார்கள்; அதுதான் உண்மை என்ற ஒரு தத்துவத்தை உணர்த்த இந்தக்கதை இடம் பெற்றுள்ளது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாபாரதம்.pdf/151&oldid=1048206" இலிருந்து மீள்விக்கப்பட்டது