பக்கம்:மாபாரதம்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

14

மாபாரதம்

தடுத்தான். அவள் அவன் புதிய பாசத்தைக் கண்டு வெறுக்கவில்லை. முன்னினும் அவனிடம் நேசம் காட்டினாள்.

“உன்னால் இவனை வளர்க்க முடியாது. இவனை வளர்த்து வாலிபன் ஆக்கிக் கலைகளும் கல்வியும் கற்பித்து உன்னிடம் ஒப்புவிக்கிறேன்” என்றாள்.

கலங்கரை விளக்குபோல் கரையில் நின்று அவர்கள் செல்வதைக் கண்டு மனம் கலங்கினான். அவர்கள் மறையும்வரை பார்த்துக்கொண்டே நின்றான். அவள் குழந்தையோடு கங்கையாற்றில் மறைந்தாள்.

அவனுக்கு நடந்தவை ஒன்றும் விளங்கவில்லை. அவள் தன்னிடம் விடைபெறு முன்னர்ச் சில வினாக்களை எழுப்பி அவளிடம் விடைபெற்றான். கங்கை இச்செய்திகளைச் சொன்னாள்.

கங்கைக்கு ஏற்பட்ட சாபம்

நான்முகன் அவையில் வான் நதியாகிய கங்கை வண்ணச் சேலை உடுத்திக் கண்ணைக் கவரும் அழகோடு நடந்து சென்றாள். விண்ணைப் பிளக்கும் இடிக்கும் மழைக்கும் கடலுக்கும் கடவுளாகிய வருணன் அவள் அழகில் மயங்கி நின்றான். காற்று வேந்தன் ஆகிய வாயு அவள் சேலையைச் சற்று விலகச் செய்தான். தங்க நிறமுள்ள அவள் அங்க அழகில் வருணன் தன் மனதைப் பறி கொடுத்தான். அவனுக்கு மனத்தில் சலனம் ஏற்பட்டது. “காற்றே நீ ஒரு கவிதை தாராயோ” என்று ஏக்கம் கொண்டான். நான்முகன் எத்திசையிலும் எது நடக்கிறது என்பதை எளிதில் அறிந்து கொண்டான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாபாரதம்.pdf/17&oldid=1239407" இலிருந்து மீள்விக்கப்பட்டது