பக்கம்:மாபாரதம்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராசீ

15


“தெய்வ நிலை அடைந்தும் உம் மனம் பக்குவப்படவில்லை, ஆசைகள் அலை மோதுகின்றன. அதனால் நீர் பிறவி எடுத்து உறவுகளை வளர்ப்பீர்” என்று சாபம் இட்டான்.

இருவரும் பதவி இழந்து பரிதாப நிலை அடைந்தனர், கங்கை மூட்டை முடிச்சுகளை எடுத்துக்கொண்டு அமரரின் நாட்டை வீட்டு பூலோக யாத்திரைக்குப் பயணம் ஆனாள்.

வழியில் வசுக்கள் எண்மர் சந்தித்தனர்; கள்ளத்தனமாக விழிகளை மோதவிட்டுக் காதல் செய்வதும் களவேயாகும்; பிறர் பொருளைக் கவர்வதும் களவேயாகும். அத்தகைய பள்ளத்தில் விழுந்த வசுக்கள் எண்மரும் சாபத்தால் பிடிபட்டு பூமிக்குத் தள்ளப்பட்டனர்.

பிரபாசன் என்ற வசு ஒருவன் தன் மனைவியின் விருப்பத்தை நிறைவேற்ற வசிட்டர் வீட்டில் இருந்த காமதேனுவைத் தன் நண்பர் எழுவருடன் சென்று களவாடினான். ஞானப் பார்வையில் இச் செய்கையை அறிந்த வசிட்டர் எண்மரையும் மானிடர் ஆகுக எனச் சபித்தார். அவர்களுள் பிரபாசன் மட்டும் நெடிய காலம் மண்ணுலகில் உழன்றுபெண் வாடையின்றி வறண்ட வாழ்வு வாழ வேண்டும் என்று கூடுதலாகச் சபிக்கப்பட்டான். மற்றும் எழுவரும் கங்கையிடம் தம்மைப் பிறந்தவுடன் அழித்து விடுமாறு வேண்டினர். வசுக்களின் வேண்டுகோளுக்கு இணங்கி அவர்கள் எண்மரும் பிறக்கும் புண்ணிய பூமியாகத் தன்னை அவர்களுக்குத் தந்தாள்.

இந்த வரலாற்றை எடுத்துச் சொல்லி மர்ம நாவலில் வரும் சிக்கல்களை விளக்குவது போலத் தம் செயல்களுக்–

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாபாரதம்.pdf/18&oldid=1239408" இலிருந்து மீள்விக்கப்பட்டது