பக்கம்:மாபாரதம்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

16

மாபாரதம்

குக்காரணம் கூறினாள். அழைத்துச் சென்ற மகனைவேத சாத்திரங்களும் வாட்பயிற்சியும் கற்பிக்க முறையே வசிட்டரையும் பரசுராமனையும் அணுகினாள். கல்வியும் ஒழுக்கமும் மிக்க சான்றோர்களால் அவன் வளர்க்கப்பட்டான். ‘தேவ விரதன்’ என்று பெயரிடப்பட்டுப் பெரியோன் ஆக்கப்பட்டான்.

கங்கைக்கரையில் தன் மைந்தனைக் கொண்டு வந்து விட்டுச் சங்கை இல்லாமல் தன் மகனை அவன் கண்டு கொள்ளச் செய்து இருவரையும் இணைத்து விட்டுச் சந்தனுவிடம் விடை பெற்றாள். மகனைப் பெற்ற மகிழ்ச்சியில் மனைவியைப் பிரிந்த துயரத்தை மறந்தான். மகனுக்கு மணிமுடி சூட்டி ஆட்சி தந்து அவனால் உலகம் நன்மையுறச் செய்து விட்டுப் பின் விண்ணுலகம் வந்து சேரும்படி சொல்லிப் போயினாள். கூடியவர் பிரிந்து சென்றனர்.

நினைவு அலைகள்

கங்கையின் மகனை இளவரசனாக்கி வைத்துப் பித்தம் பிடித்தவன் போல் சித்தம் கங்கையின் பால் செலுத்திக் கங்கைக்கரையின் சோலைகளிலும் காடுகளிலும் வேட்டை மேல் வேட்கையனாய்த் திரிந்து வந்தான்; ஒழிந்த நேரத்தில் கழிந்த நாட்களை எண்ணி மனம் அழுங்கியவனாய்க் கிடந்தான். அவள் உருவெளித் தோற்றத்தில் வாழ்ந்து கனவு உலகில் சஞ்சரித்துக் கொண்டிருந்தான். அவள் தெய்வப் பெண் என அறிந்தும் அவனால் மறக்க இயலவில்லை. பழைய வாசனை அவனைப் பிடித்துத் தின்றது. விரகதாபம் அவனை நரக வேதனையில் சுழற்றியது.

அங்கே பளிங்குக்கற்கள் இருந்திருந்தால் பாவைக்கு ஒரு கங்கை மண்டபம் எழுப்பி இருப்பான். அக்கல்லின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாபாரதம்.pdf/19&oldid=1239409" இலிருந்து மீள்விக்கப்பட்டது