பக்கம்:மாபாரதம்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராசீ

17

நிழலில் அவள் முகத்தின் முறுவலைப் பார்த்திருப்பான். கவிஞனாக இருந்திருந்தால் அவள் பேரில் ஒரு காதற் கோவை தொடுத்து இருப்பான். கல்லைச் செதுக்கும் சிற்பியாக இருந்திருந்தால் அங்கே எழில் மிக்க பொற் சிலையை வடித்திருப்பான். ஒவியனாக இருந்திருந்தால் தாடி வளர்த்துக் கொண்டு குழிவிழுந்த கண்களோடு சித்திரம் வரைந்து சீரழிந்து இருப்பான்.

சோலைக் குயில்கள் எல்லாம் அவள் குரலைக் கூவிப் பாடிக் கொண்டிருந்தன. தோகை மயில்கள் எல்லாம் அவள் கோல அழகை விரித்துக் காட்டிக் கொண்டிருந்தன. முல்லைக் கொடிகள் எல்லாம் அவள் வெள்ளைப் பற்களைக் காட்டிச் சிரித்துக் கொண்டிருந்தன. கொடிகள் எல்லாம் அவள் தன்னைத் தழுவ விழைந்த விழைவுகளை நினைப்பூட்டிக் கொண்டிருந்தன.

பரிமளகந்தியைச் சந்தித்தல்

அந்த நிலையில் நீலவானத்து நிலவு ஒளியில் யமுனை நதிக்கரையில் யவ்வனம் மிக்க பேரழகியைக் கண்டான். படகு ஓட்டிக் கொண்டு வந்து துடுப்பை எடுத்துச்செலுத் விட்டுக் கரை நோக்கி நடந்தாள்; அவள் மீன்கண் அவள் மீனவப் பெண் என்ற நினைப்பை எழுப்பியது; அருகில் வந்த அவளை மனம் உருகி “என்னைக் கரை சேர்க்கமாட்டாயா?” என்று வினவுவது போலப் பார்த்தான்.

இருவருக்கும் வயது இடைவெளி தடை செய்தது.

வயது மிக்க ஒருவன் இளநங்கையை விரும்பினான். சாதியில் அவன் அரசன்; இவள் மீனவள். அரசன் என்ப–

2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாபாரதம்.pdf/20&oldid=1239413" இலிருந்து மீள்விக்கப்பட்டது