பக்கம்:மாபாரதம்.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

210

மாபாரதம்

சொல்லியதைத் துறந்து களத்தில் இறங்கியது பழிக்கு இடம் தரும்; அருச்சுனன் கடமை தவறி விட்டான் என்ற இழி சொல் என்னைச் சாரும். உயிர் எனக்கு வெல்லம் அல்ல; செயிர்த்து எழுந்து பகைவர்களைப் புறம் காட்டச் செய்கிறேன்” என்று உறுதி தந்து கண்ணனை அமைதி பெறச் செய்தான். மூன்றாம் நாட்போரில் இது ஒரு எதிர் பாராத நிகழ்ச்சியாக அமைந்தது. கண்ணன் பாண்டவர்க்காக எதையும் செய்யக் காத்திருந்தான் என்பதற்கு இது ஒரு சான்றாக நின்றது. வார்த்தைகளை விடச் செயல் திறன்தான் மேற் கொள்ளத் தக்கது என்ற புதிய சிந்தனை யைத் தோற்றுவித்தான். வீரம் பேசித் தோல்வியைச் சந்திப்பதில் அவனுக்கு நம்பிக்கை இல்லை; நன்மை நாடிச் சில தவறுகளும் செய்யலாம் என்பது அவன் போக்காக இருந்தது.

மற்றும் சக்கரத்தைக் கண்ணன் கைக்கரத்தில் எடுத்தானே தவிர மெய்ச்சிரத்தில் ஏவினான் அல்லன். இது அவன் சூத்திரதாரி என்பதற்கும் ஓர் எடுத்துக் காட்டாக விளங்கியது. துவண்டு கிடந்த விசயனைத் தூண்டவும் எல்லை மீறிய எதிரியை ஒடுக்கவும் மேற்கொண்ட செயல்களாகவும் கொள்ளலாம். தான் யார் என்பது தெரிந்தும் சிண்டிப் பார்க்க நினைத்த வீடுமனை நெறிப்படுத்தவும் போர்க்களத்தைக் குறட்டைவிட்டு உறங்கும் மடமாக நினைத்த மடமையைப் போக்கவும் கண்ணன் செயல்பட்டான் என்பது பொருந்தும்.

அசுரர் இருவர் மரணம்

மானிடர் வரபலங்களும் மாயைகளும் இன்றிச் செய்யும் போரில் அசுரர்களும் கலந்து கொண்டது விரும்பத் தகாத ஒன்று ஆகும். அவர்கள் மாயைகளில் வல்லவர்கள். அவர்கள் சூழ்ச்சிகள் மானிடரால் வெல்ல இயல்வது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாபாரதம்.pdf/213&oldid=1047468" இலிருந்து மீள்விக்கப்பட்டது