பக்கம்:மாபாரதம்.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

240

மாபாரதம்

கடவது என்று அவன் தந்தையாகிய விருத்தகத்திரன் ஒரு வரம் வேண்டிப் பெற்றிருந்தான். அதனால் கண்ணன் அவன் சிரத்தைக் கொய்வதோடு அல்லாமல் அதனை அவன் தந்தையின் கையில் போய் விழச்செய்யுமாறு அவன் அருச்சுனனுக்குச் சொல்லி வைத்தான். அவ்வாறே அவன் தலையைச் சிவன் தந்த வில்லால் வெட் டி சமந்த பஞ்சகம் என்ற மடுவில் மாலை வழிபாடு செய்து கொண்டு தருப் பணம் விட்டுக் கொண்டிருந்த அவன் தந்தையின் கரத்தில் விழுமாறு செய்தான். தலை அவன் கைப்பட்டதும் அது உருண்டு தரையில் விழுந்தது. தந்தையின் தலை வெடித்து அவனும் மரண வாயிலை அடைந்தான்.

அத்தமனம் வந்த பிறகு அருச்சுனன் சயத்திரதனைக் கொன்றான் என்று தவறாக முடிவு செய்து அவன் சபத மொழி பிழைத்தான் என்று ஆரவாரம் செய்தனர். கதிரவனை மறைத்து வைத்த கண்ணனின் சக்கரம் அவன் கைக்கு வந்து சேர்ந்தது. சூரியன் வெளிப்பட்டுக் கதிர் களை வாரி இறைத்து வையகத்துக்குப் பொழுது சாய வில்லை என்பதைக் காட்டியது. தாங்கள் ஏமாற்றப்பட் டதை அறிந்து துரியன் வெட்கமும் வேதனையும் பட்டு மீண்டும் அவர்களை எதிர்த்துப் போர் செய்தான்.

இப்போரில் கடோற்சகன் பெரும் பங்கு ஏற்றான். இவன் மாயப்போர்கள் தொடர்ந்து பல செய்தான். அவன் தாக்குதலைத் தாங்கமுடியாமல் இந்திரனிடமிருந்து பெற்ற வேலினைக் கன்னன் எய்து வீழ்த்துமாறு துரியன் வேண்டினான்.

அருச்சுனனைக் கொல்ல வைத்திருந்த வேலைக் கடோற்சகன் மீது பாய்ச்சி அதனை வீண்படுத்தினான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாபாரதம்.pdf/243&oldid=1047293" இலிருந்து மீள்விக்கப்பட்டது