பக்கம்:மாபாரதம்.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராசீ

241


பூரிசிரவசுவின் வதம்

இதற்கிடையில் சாத்தகி களத்தில் புகுந்த போது அவன் பூரிசிரவசு என்பவனைக் கொன்று குவித்தது குறிப்பிடத் தக்க செய்தியாகும்.

பூரிசிரவசு என்பவன் சாத்தகியின் ஜன்ம விரோதி; மேலும் அவன் யதுகுலத்தலைவனும் ஆவான். கண்ணன் அனுப்பி வைத்த படைத்தலைவர்களில் ஒருவன் இவன் ஆவான். சாத்தகி வயதில் இளையவன்; இவன் மூத்தவன். அவன் இந்த யுத்த களத்தில் தன்குடும்பப் பகையை முடித்துக் கொள்ள இப்போர்ச் சூழலைப் பயன்படுத்திக் கொண்டான்.

இருவரும் மற்போரும் விற்போரும் செய்தனர். சாத்தகி போர் செய்ய முடியாமல் சற்றுக் களைத்து விட்டான். அவனைக் கீழே தூக்கிப் போட்டுச் சாத்தத் தொடங்கி னான். கண்ணன் விசயனுக்கு அதைக் காட்டி அவன் மீது அம்புபோட்டுச் சாத்தகியைக் காக்கச் சொன்னான். விசயன் நோக்கமெல்லாம் சயத்திரதனைக் கொல்வதிலேயே இருந்தது; இரண்டு பக்கமும் அவன் தாக்குதலுக்கு ஈடுகொடுக்க வேண்டி இருந்தது. மேலும் சாத்தகியும் பூரிசிரவசுவும் போரிடுகையில் இடையில் மூன்றாவது ஆள் புகுவது அறம் ஆகாது என்று அருச்சுனன் கூறினான்.

நிராயுதனாக இருக்கும் சாத்தகியை வாள்கொண்டு வெட்டுவது உடனே தடுக்கப்பட வேண்டும் என்று கண்ணன் ஆணையிட்டான். அதற்கு மேல் அவன் தர்மத்தைப் பற்றிப் பேசிக் காலதாமதம் செய்ய விரும்பவில்லை. கண்ணன் கட்டளையைக் கேட்டு அம்பு தொடுத்து அவன்

16

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாபாரதம்.pdf/244&oldid=1047294" இலிருந்து மீள்விக்கப்பட்டது