பக்கம்:மாபாரதம்.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராசீ

243


தருமன் தொடர்ந்து அதைக் கூற விரும்பவில்லை; நன்மைக்காகச் சில பொய்கள் கூறுவதும் அறமே யாகும் என்று கண்ணன் உணர்த்தினான்.

“பொய்மையும் வாய்மை இடத்த புரை தீர்ந்த நன்மை பயக்கு மெனின்” என்ற குறட் கருத்துப்படி பொய்யும் சொல்லலாம் என்று தருமனிடம் எடுத்துக் காட்டப்பட்டது. நீல கண்டன் விரும்பி ஆலகால விஷத்தை ஏற்று மற்ற உயிர்களைக் காப்பாற்றிய கதை பேசப்பட்டது. இராமன் மறைந்திருந்து வாலியின் உயிரை வாங்கினான். இந்தக்கதையும் அறிவிக்கப்பட்டது. இவற்றை எல்லாம் விட மற்றவர்கள் அந்தப் பொய்யைச் சொல்லி அதனால் வரும் பாவத்தை அவர்கள் அடையாமல் தடுக்கத் தானே முன் தருமன் வந்தான். அசுவத்தாமன் என்ற யானை இறந்து விட்டது” என்று உரக்கப் பலரும் கேட்க உரைத்தான். யானை என்ற சொல்லைத் தாழ்வாகச் சொல்லி அது துரோணனின் செவியில் படாதவாறு தப்பித்துக் கொண்டான். தாய் பிழைக்க வேண்டுமானால் சிசுவைக் கொல்லும் நிலை மருத்துவர்க்கு நேர்கிறது. அதே போலத்தான் துணிந்து தருமன் “அசுவத்தாமன் என்ற யானை இறந்து விட்டது” என்று கூறினான். அசுவத்தாமன் என்ற பெயரை மட்டும் எடுத்துச் சொன்னான். யானை என்ற சொல்லைப் படுத்துச் சொன்னான்; யானை என்ற சொல் செவியில் படாதபடி கண்ணனின் சங்கொலி வேறு துணை செய்தது.

அசுவத்தாமன் இறந்தான் என்ற சொல் தொடரைக் கேட்டதும் துரோணன் செயலற்று விட்டான். மகன் இறந்தான் என்ற சோகத்தால் அவன் புலம்பி அழவில்லை. பற்றற்ற ஒரு மனநிலை ஏற்பட்டது. போரில் அவனுக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாபாரதம்.pdf/246&oldid=1047297" இலிருந்து மீள்விக்கப்பட்டது