பக்கம்:மாபாரதம்.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராசீ

245

டத்துய்மன் பிறக்கும்போதே துரோணனைச் கொல்லும் வரம் பெற்றது தெய்வ அருள் என்றும், மனிதத்தன்மை யால் யாரும் அவன் தந்தையைக் கொல்லவில்லை என்றும் ஆறுதல் கூறினான். அவனும் சினம் ஆறி அடங்கினான் .

9. கன்னனின் முடிவு

வீமன், நகுலன், தருமன், சகாதேவன் இவர்களைக் கன்னன் தனித்தனியே சந்தித்துப் போர்செய்த நிகழ்ச்சிகள் சாதாரணமானவை. தன் அன்னை குந்தியிடம் தான் நால் வரையும் கொல்வதில்லை என்று வாக்குறுதி தந்து விட்டதால் அப்போர்கள் பெரும்பாலும் தற்காப்புக்காகவே நிகழ்த்தப் பெற்றன.

கன்னன் அருச்சுனனைக் கொல்வதாக வீர மொழி பேசி இருக்கிறான். அவ்வாறே அருச்சுனனும் சுடுமொழி கூறி இருக்கிறான். எனவே கன்னன் இறுதி நாள் அருச்சுனனோடு செய்த பதினேழாம் நாட்போரே சிறப்பு வாய்ந்தது என்று கூறலாம்.

போர் தொடங்கியது. தருமன் கண்ணனைப் பார்த்து “இன்றைய வெஞ்சமரில் கன்னன் வான்உலகு எய்து வானோ இயம்புதி” என்று கேட்டான்.

“இத்தினம் கன்னன் விசயனின் அம்பினால் இறப் பான்; அடுத்தநாள் துரியன் வீமனால் உயிர் துறப்பான்; அத்தினாபுரியும் பாரத பூமியும் உன் ஆட்சிக்கு வரும்” என்று கண்ணன் உரைத்தான்.

செங்கண்மால் ஆன கண்ணன் உரைத்த இன் சொல் கேட்டுத் தெளிவு அடைந்த தருமன் இதுவரை கண்ணன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாபாரதம்.pdf/248&oldid=1047301" இலிருந்து மீள்விக்கப்பட்டது