பக்கம்:மாபாரதம்.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

246

மாபாரதம்

தங்களுக்குச் செய்தருளிய உதவிகளைப் பாராட்டிப் பேசினான்.

“கங்கை நதியில் கழு முனையில் வண்டாக அமர்ந்து வீமனைக் காத்தாய்”

“அரசர் அவையில் நாங்கள் செயலற்று மனம் குழம்பிக் கிடந்த நிலையில் பாஞ்சாலிக்குத் துகில் அளித்து மானம் காத்தாய்”

“கானக வாழ்க்கையில் துர்வாச முனிவர் வந்த போது அவர் சினத்தினின்று எங்களைக் காப்பாற்றினாய்”

“பாண்டவர்களுக்காகத் துரியன் பால் தூது நடந்து கால்கள் சிவந்தாய்”

“விதுரன் வெஞ்சிலை முறிக்கச் செய்தாய்”

“அசுவத்தாமனைத் துரியனிடமிருந்து பிரித்து வைத்தாய்”

“கன்னனின் கவசத்தையும் குண்டலங்களையும் கேட்டு வர இந்திரனை அனுப்பிப் பெற்றாய்”

“விசயனின் மகன் இராவானைக் களப்பலிக்குச் சம்மதிக்கச் செய்தாய்”

“அமாவாசையை எங்களுக்காக ஒரு நாள் முன் வரச்செய்து எங்களுக்குச் சாதமாக்கித் தந்தாய்”

“விசயனுக்குத் தேர் ஊர இசைந்தாய்"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாபாரதம்.pdf/249&oldid=1048267" இலிருந்து மீள்விக்கப்பட்டது