பக்கம்:மாபாரதம்.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

248

மாபாரதம்


“உன்னுடைய திருவிளையாடல் இந்த உலக அரசர் அறியமாட்டார்” என்று கூறி அவன் திருவடி மலர்களில் விழுந்து வணங்கினான்.

கண்ணனும் அறச் செல்வனாகிய தருமனை அன்புடன் தழுவிக் கொண்டு “இந்த அமரில் நீங்கள் ஐந்து பேரும் உயிர் இழக்கமாட்டீர்கள்; அஞ்சவேண்டாம்; நான் இருந்து காப்பேன்; தவறேன்” என்று அபயம் அளித்தான். திட்டத் துய்மனைப் பார்த்து “அணி வகுக்க” என்றான். அவ்வாறே திட்டத் துய்மன் படைகளை அணிவருத்தான். அவ்வாறே கன்னனும் அன்று நடக்கப் போகும்போர் குறித்துத் துரியனிடம் கூறினான்

“விசயனுக்குத் தேர்ப்பாகனாகக் கண்ணன் உள்ளான்; அதனால் அவன் உயிர் தப்பி வருகிறான்; கண்ணனுக்கு நிகராகத் தேவர் உலகிலும் யாரையும் கூற முடியாது; சல்லியனே அவனுக்கு ஒப்பு ஆவான்” என்றான் கன்னன். அவனைத் தனக்குத் தேர்ப்பாகன் ஆக்கினால் வெற்றி உறுதி என்றான்.

“ஊர் பேர் தெரியாத என்னைப் பேரரசன் ஆக்கினாய், தேரோட்டி மகனாகிய என்னைப் பார் ஆளும் மகிபன் ஆக்கினாய்; யான் என் உயிரை யாருக்குத் தரப் போகிறேன். செஞ்சோற்றுக் கடன் கழித்து உன் செங் கோலை உனக்கே நிறுத்துவேன்” என்றான்.

துரியனின் வேண்டுகோளை ஏற்றுச் சல்லியன் தேர் ஒட்டச் சம்மதித்தான். எனினும் “நீ விசயனை வெல்வாய் என்பதில் உறுதி இல்லை” என்று தன் மனத்தில் பட்டதை உரைத்தான், கன்னனுக்குக் கோபம் வந்துவிட்டது. நீ வீரர் முன் என்னை இகழ்ந்து பேசாதே; உன்னைத் தேர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாபாரதம்.pdf/251&oldid=1047353" இலிருந்து மீள்விக்கப்பட்டது