பக்கம்:மாபாரதம்.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

254

மாபாரதம்

10. அவல முடிவுகள்

பாரத யுத்தத்துககே மூல காரணம் துரியன் இராமாயணத்தில் இராவணனின் வீழ்ச்சியோடு போர் முடிவு பெறுகிறது. பாரதத்தில் துரியனின் முடிவோடு கதையும் முடிகிறது. சர்வாதிகாரிகள் தம்மைச் சார்ந்தவர் அனைவரையும் அழித்துவிட்ட பின் தாமும் அழிவை அடைகின்றனர்.

பெற்ற பிள்ளைகளையும், உற்ற தம்பியரையும் கற்ற ஆசிரியர்களையும் இழந்த பின்தான் அவர்கள் சாவினைச் சந்திக்கின்றனர். வீமனை எதிர்த்துத் துச்சாதனன் இறக் கிறான். துச்சாதனனும் பதினேழாம் நாட் போரிலேயே மரணத்தைச் சந்திக்கிறான். ஆரம்ப முதல் அவன் தம்பியர் தொடர்ந்து வீமனோடு போரிட்டு மரணம் அடைகின்றனர்.

பதினெட்டாம் நாட் போர்

இதுவே கடைசி நாட்போர். கன்னனை இழந்ததும் துரியன் கை இழந்தவனாகக் காணப்பட்டான். உயிருக்கு இனிய நண்பனையும், வாழ்க்கைக்கு இனிய தம்பியரையும் இழந்த பின்பும் அவன் கொண்ட உறுதியிலிருந்து பின் வாங்கவில்லை. எஞ்சியிருந்த மாவீரன் மாத்திரி நாட்டு அரசன் சல்லியன் ஆவான். அவனைப் படைத் தலைமை ஏற்கச் செய்தான்.

பதினெட்டாம் நாள் இறுதிப்போர் அன்று தருமன் பாண்டவர் பக்கத்தில் தலைமை ஏற்றான். இதுவரை அமைதியாக ஆறி அடங்கி இருந்த அறத்தின் மைந்தன் தருமன் சீறிப் புயல் எனப் பாய்ந்தான். அவன் தன் கையிலிருந்த ஆற்றல் மிக்க அம்பினால் சல்லியனைக் கொன்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாபாரதம்.pdf/257&oldid=1047361" இலிருந்து மீள்விக்கப்பட்டது