பக்கம்:மாபாரதம்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராசீ

23

மாணவன் ஆயிற்றே என்று அவனிடம் வந்து மன்றாடினான். ‘பெண்ணைத் தொடாத வாழ்வு நன்மை பெறாது’ என்று எடுத்துக்காட்டினான். சொற்கள் மாறின; அவை தோல்வி பெற்றன; அச்சுறுத்திப் பார்த்தான்; அது விற் போரில் சென்றது; இருவரும் வில் வித்தையில் நிகரானவர்தாம்; எனினும் வீடுமன் இளையவன்; கிழப்புலி இளஞ் சிங்கத்தின் முன் சீற்றம் அடங்கியது. மாற்றம் வேறு ஒன்றும் கூற இயலாது அவன் தன் தவத்தில் ஆழ்ந்தான்.

மனிதர் யாரும் உதவவில்லை. தெய்வங்களை வழி பட்டாள். வீடுமனைக் கொல்லும் ஆற்றல் தனக்கு வேண்டும் என்று சிவனை வழிபட்டாள். “அடுத்த பிறவியில் நீ இவனை வெல்வாய்” எனறு வரம் அருளப்பட்டது; சிகண்டி என அவள் பெயர் பெற்றாள். வீடு மனைக் கொல்ல அவள் வஞ்சினம் கொண்டாள்.

பிறப்பால் பெண் ஆயினும் செய்கையால் ஆணாக நடந்து தக்க காலம் வரும் வரை அவனைக் கொல்வதற்காகக் காத்து இருந்தாள். போர்க்களத்தில் அருச்சுனனின் தேரில் முன் அமர்ந்து வீடுமனைத் தாக்கினாள்.

2. பாண்டவர் துரியோதனாதியர் பிறப்பு

ஒரே மகன் விசித்திர வீரியனும் அற்ப ஆயுளில் தன் கதையை முடித்துக் கொண்டான். சந்தனுவின் இளைய மனைவி பரிமளகந்தியும் ஒரு விதவை; அவளோடு வீட்டில் மூன்று விதவைகள் அறுத்துவிட்டு அமங்கலமான வாழ்வு நடத்தினர்.

விதவைத்தனம் என்பது பருவ மாறுதல் அல்ல; அது கணவனை இழந்த அவலநிலை; விதவைகளும் மறுமணத்–

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாபாரதம்.pdf/26&oldid=1048271" இலிருந்து மீள்விக்கப்பட்டது