பக்கம்:மாபாரதம்.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராசீ

257


மற்போர் தொடங்கியது; கதாயுதம் கொண்டு போர் செய்யலாம் என்று பேசி முடிவு செய்தனர். இருவரும் சம வலிவும் ஆற்றலும் உடைமையால் வெற்றி தோல்வி கண் டிலர். துரியன் வீமனை நோக்கி “உன் உயிர் நாடி எங்கே உள்ளது?” என்று கேட்டான். அவன் ஒளிவுமறைவு இன்றி “நெற்றி” என்றான்; இவன் நெற்றி அடி” ஒன்று கொடுத்தான்; வீமன் துவண்டு கீழே விழுந்தான். மறுபடியும் மூர்ச்சை தெளிந்து கதை கொண்டு தாக்கினான். துரிய னின் உயிர் நாடி எங்கே உள்ளது என்று அவனைக் கேட்டான். நெற்றியே என்று வெற்றுரை பேசினான்.

பொய் சொல்லி ஏமாற்றினான். வீமன் அவன் நெற்றியை நோக்கிக் கதை கொண்டு தாக்கினான். குருதி வெளிப்பட்டது; ஆனால் உயிர் அவனை விட்டு வெளிப் படவில்லை. அவன் சொன்னது முழுப் பொய் என்பதை அறிந்தான்.

மறுபடியும் போர் தொடங்கியது. அருச்சுனன் கண்ணனை நெருங்கித் “துரியனின் உயிர் நாடி உள்ள இடம் யாது?” என்று கேட்டான்.

“ஆயிரம் நாள் அடித்துப் புரண்டாலும் அவர்களுள் யாரும் ஒருவரை ஒருவர் வெல்ல முடியாது; நேர் முறை யில் போர் செய்தால் என்றுமே வெல்ல முடியாது; குறுக்கு வழியில் சென்றால் தான் சுருக்கமாக முடிக்கலாம்” என்றான்.

“நறுக்கு என்று உரை தருக” என்றான். அவன் ‘தொடையை அடித்து நொறுக்கினால் விடை கிடைக்கும்’ என்று கூறினான்.

17

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாபாரதம்.pdf/260&oldid=1048272" இலிருந்து மீள்விக்கப்பட்டது