பக்கம்:மாபாரதம்.pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராசீ

259

பொருளியல் பேசவேண்டிய அவன் சேலை உரியியல் பற்றி பேசியது எப்படிப் பொருந்தும்? இங்கே வட்டமிட்டு அமர அவர்கள் செய்யும் போர் கேளிக்கைப்போர் அன்று, வீமன் உரைத்த வஞ்சினம் உள்ளது; பகைமை பற்றி நிகழ்ந்த போரேயன்றி இது விதிகளைப் பேசி விளையாடும் வினை அன்று. அது மட்டுமன்று மைத்திரேய முனிவர் என்பவர் இவனுக்கு இட்ட சாபமும் உள்ளது.கானக வாழ்க்கையில் துரியனைச் சந்தித்துப் பாண்டவர்க்கு உரிய நாட்டையும் உரிமையையும் தரும்படி அவர் அறிவுரை கூறினார். அவன் தன் தொடைகளைத் தட்டிக்காட்டி வீரம் பேசினான். அப்பொழுது அம்முனிவர். இத் தொடைகளே உன் உயிருக்கு விடை தரும்; வீமன் தன் கதையால் உன் தொடைகள் முறிய நீ சாவாய்” என்று சாபம் தந்திருக்கிறார். விதியை மீறியதும் விதியின் செயலாகும்” என்று விளக்கிக் கூறினான். பலராமனும் இவற்றை எல்லாம் கேட்டுவிட்டுத் “தீமைகள் ஒன்று இரண்டு என்று இருந்தால் தட்டிக்கேட்க முடியும்; வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்பது உண்மையாயிற்று. முதல் கோணல் முற்றும் கோணலாயிற்று” என்ற சமாதானம் அடைந்தான். தன் முன்னேயே உயிர் நிலை பற்றி அவன் பேசிய பொய்யுரை நினைவுக்கு வந்தது. அது அவன்மேல் கொண்டிருந்த பரிவினை நீக்கியது.

அவன் குற்றுயிரும் குலையுயிருமாகக் குருதியில் கிடந்தான். காகங்களும் பருந்தும் வேகமாகப் பறந்து வந்து அங்கு வட்டமிட்டன. அவை வலம் வந்து சுற்றிச் சுழன்றன பத்திரிகைச் செய்தியாளர்களைப் போல.

போரில் வெற்றி பெற்றவர்கள் பாசறையில் இரவுப் பொழுது தங்கக்கூடாது என்று ஒரு நம்பிக்கை இருந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாபாரதம்.pdf/262&oldid=1047447" இலிருந்து மீள்விக்கப்பட்டது