பக்கம்:மாபாரதம்.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

262

மாபாரதம்

கிட்டது. அதனை விலக்க முயன்றான்; சிவனை அடைந்து தவம் செய்து வில் ஒன்று வரமாகப் பெற்றான். கிருபனையும் கிருதவர்மனையும் வெளியே காவல் வைத் தான். வேகமாக உள்ளே சென்றான், சிவன் தந்த வேல் கையில் இருந்ததால் பூதம் அடங்கியது. சாத்தகியும் மற்றும் சிலர் அவனை எதிர்த்துப் போராடினர். வெறி கொண்ட அவனை யாராலும் நெறிப்படுத்த முடிய வில்லை. போரில் முறியடிக்க இயலவில்லை. திட்டத் துய்மனை அவன் தீர்த்துக் கட்டினான்.

உறங்கிக்கிடந்த பஞ்ச பாண்டவரின் வாரிசுகளான இளம் பஞ்ச பாண்டவரை உருவ ஒற்றுமையால் பாண் டவர் எனவே நினைத்து அவர்கள் தலையை வெட்டி அவர்களை மாண்டவர் ஆக்கினான்.

தலைகள் ஐந்து கிடைத்ததும் தலைகால் தெரியாமல் அவற்றை எடுத்துக்கொண்டு வந்து துரியன் முன் வைத்தான்; மங்கிய ஒளியில் அவற்றின் முழு வடிவத்தைக் காண வில்லை. முதிர்ந்த முகங்களை அவனால் வேறுபடுத்தி அறியமுடியவில்லை. மீசை முளைக்காத பச்சைப் பால கர்களைத் தன் இச்சைப்படி கொச்சைப்படுத்தி விட்டான்.

துரியன் கண்டான்; கதறினான்; “வமிச வாரிசுகளைப் பறித்துவிட்டாயே” என்று கண்டித்தான். “என்னுடைய மக்களையும் இழந்தேன்; “என் சகோதரர்களின் பிள்ளை களையுமா இழக்க வேண்டும்!” என்றான். தலைகளுக்குப் பதிலாக அவற்றின் நகல்களே இருந்தன. “நிகழ்காலத்தை அழிக்கலாம்; எதிர்காலத்தை அழிக்கக் கூடாது” என்றான்.

“என்ன காரியம் செய்தாய்? இளம் குருத்துகளைப் பறித்துவிட்டாயே! குருகுலத்துக்கு உரு இல்லாமல் செய்து விட்டாயே! போர் என்பது பயங்கரமானது என்பதை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாபாரதம்.pdf/265&oldid=1048275" இலிருந்து மீள்விக்கப்பட்டது