பக்கம்:மாபாரதம்.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராசீ

263

இப்பொழுதான் உணர்கிறேன். வீரர்கள் மட்டும் களத்தில் மாய்வது இல்லை. பெண்கள் விதவைகள் ஆகின்றனர்; குழந்தைகள் சாகின்றனர். போரைத் துண்டுகிறவர்கள் எவ்வளவு பெரியவர்களாயினும் சரி, அவர்கள் கூறும் கொள்கை எத்தகைய தாயினும் சரி, அவர்கள் மனித குலத்தில் எதிரிகள். இது சரித்திரம் கற்றுத் தரும் பாடம்”.

“விலங்குகள் கூடத் தேவை இல்லாமல் கொல்வது இல்லை; யுத்த வெறியர்கள் இதில் சிக்கிவிட்டால் தப்ப முடிவதில்லை; அழுகைக்கே அவர்களுக்கு நேரம் இல்லாமல் தொடர்ந்து உலகை அழித்து விடுகிறார்கள்”.

“அந்தணன் நீ; உன் தர்மத்தைக் கைவிட்டாய்; அடு போர் உனக்குத் தகாது; பயிர்களிடை தோன்றும் களை களைப் பறிக்கலாமே தவிரப் பயிர்களையே அழிக்கக் கூடாது; வேதம்படி; வேதபாடசாலை நடத்து; பஞ்சாங்கம் பார். கோயில் பூசை செய்; தவம் செய்; பாவத்தைப் போக்கிக்கொள்; சாதிபேதம் காட்டக்கூடாது என்ப தற்காக உன்னையும் உன் தந்தையையும் போர்க் குலத் துக்கு உயர்த்தினேன். ஆனால் நீவிர் அரச குலத்தையே ஆணிவேரோடு களைந்து விட்டீர்; என் கண் முன் நிற்காதே; எங்காவது போய்த் தொலை” என்று கடிந்து கொண்டான். அறத்தின் வேலியாக இருக்க வேண்டிய சான்றோர்களே தவறு செய்தால் பின் யார் தான் தவறு செய்ய மாட்டார்கள்?

“இளைஞர்கள் நீங்கள் உங்களை தம்பித்தான் சமுதாயமே வாழ்கிறது; அவசரப்படுகிறீர்கள், அநீதி நடந்தால் அதை எதிர்க்கிறீர்கள் நியாயம், தான்; அதற்காகச் சட்டத்தை நீங்கள் எடுத்துக் கொள்ளக்கூடாது"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாபாரதம்.pdf/266&oldid=1047456" இலிருந்து மீள்விக்கப்பட்டது