பக்கம்:மாபாரதம்.pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராசீ

265

வீழ்ச்சிகள் அடைந்தோம்; எந்தஒரு செயலுக்கும் எதிர்ஒலி உண்டாகித் தான் தீரும்” என்று கூறி அவர்களை எஞ்சி யிருக்கும் திருதராட்டிரனிடம் அழைத்துச் சென்றான்.

வீமனைப் போன்ற தூண் ஒன்று துரியன் செய்து வைத்திருந்தான். அந்தத் துணை அவ்விழியில்லாதவன் முன் கண்ணன் நிறுத்தினான்.

‘வீமனைக் காணவேண்டும்’ என்றான்.

அந்தத் துணை அவன் முன்னால் நகர்த்தினான்; இரும்புத் தூண் என்றாலும் திருதராட்டிரன் தழுவலில் அது துரும்பாக உலுத்துவிட்டது. பொடிபட்டது; அதிலே இருந்து விடுபட்ட திருதராட்டிரன் தன் செய்கைக்கு வெட்கப்பட்டான். தீமையைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாமல் போய்விட்டது. பாசம் அவனை நாசவழிக்குக் கொண்டு சென்றது.

ஆவேசத்தில் தவறு செய்ய நினைத்ததற்கு வருந்தினான். காந்தாரியையும் திருதராட்டிரனையும் தருமன் வணங்கினான்.

“அரசினை ஏற்று மக்களின் துன்பச்சுமையைக் குறைக்க வேண்டும். அது உன் கடமை” என்று கூறித் தருமனிடம் ஆட்சியை ஒப்படைத்து விட்டுக் கண்ணன் தன் தம்பி சாத்தகியையும் தமையன் பலராமனையும் அழைத்துக் கொண்டு துவாரகை போக முற்பட்டான்.

மக்கள் ஐவரை இழந்த பாஞ்சாலி அசுவத்தாமனைத் தக்கபடி பழி வாங்கச் சூள் உரைத்தாள். மிக்க வலிவு உடைய வீமன் அவனைத் தாக்க விரைந்தான். அவனுக்குப் பக்கத் துணையாக அருச்சுனனும் கண்ணனும் பின் தொடர்ந்தனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாபாரதம்.pdf/268&oldid=1048276" இலிருந்து மீள்விக்கப்பட்டது