பக்கம்:மாபாரதம்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36

மாபாரதம்


பாண்டுவின் மரணம்

பாண்டு மனம் மகிழ்ந்தான். அதன் பின்னர் அம்மந்திரத்தை மாத்திரிக்குச் சொல்ல அவள் இரட்டைப் பிள்ளைகளை ஒரேகருவில் பெற்றாள். சூரியனின் மைந்தர்களான அஸ்வினி தேவர்கள்; அவர்களும் இரட்டையர்கள். அவர்களை நினைத்ததால் அவர்கள் வருகையால் நகுலன் சகாதேவன் ஆகிய இரட்டையர்கள் பிறத்தனர்:

பிறந்த மக்கள் ஐவரையும் சிறந்த முறையில் பாண்டு வளர்த்துப் பெருமகிழ்வு கண்டான்; உரிய பருவங்களில் அவ்வப்பொழுது செய்யப்படும் சடங்குகளால் அவர்கள் பெருமை பெற்றனர். கல்வி கேள்வி கற்று அறிவு பெற்ற னர்:விலங்குகளை வேட்டையாடும் திறமையையும் பெற்று உயர்ந்தனர். உள்ளம் நிறைந்த வாழ்வில் அவன் தனக்கு ஏற்பட்ட சாபத்தை மறந்தான்.

வசந்த காலம் வந்தது. தென்றல் சுகத்தைத்தந்தது. வண்டுகள் மலர்கள் நாடித் தேன் உண்டன. வேனிற் பருவத்து விளைவு, மன்மதன் அம்புகள் இடும் வளைவு. அதனால் குவளை போன்ற அழகுடைய மாத்திரியின் நினைவு; இவை பாண்டுவை வாட்டின. அவள் வனப்பு அவனுக்குக் கிளர்ச்சியை உண்டாக்கியது. தனக்கு விதிக்கப்பட்டிருந்த சாபத்தையும் மறந்து விட்டான். விரக தாபம் போக்க அவள் சேர்க்கையில் தன்னை மறந்தான். இன்பம் ஈர்த்தது, தன் வாழ்வைத் துறந்தான், இறப்பு அவனை ஏற்றுக் கொண்டது. அவன் அசதியாக மெய் மறந்து அயர்ந்து உறங்குகிறான் என்று மாத்திரி நினைத்தாள். அவன் வசதியாக வான் உலகு அடைந்து சேர்ந்தான் என்பதை அறிந்திலள்.

மாத்திரி கணவன் இறந்தது கண்டு வாய்விட்டு அரற்றினாள். அவன் உயிரைத் தேடித் தன் உயிரை அனுப்பி–

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாபாரதம்.pdf/39&oldid=1048287" இலிருந்து மீள்விக்கப்பட்டது