பக்கம்:மாபாரதம்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராசீ

37

னாள். இரண்டு உடல்கள் ஒரே எரியில் தகனம் செய்யப் பட்டன. ஈமக்கடன் இருவருக்கும் தன் மக்களைக் கொண்டு செய்து முடித்துவிட்டுக் குந்தி அக்கானகத்தை விட்டு அத் தினாபுரி அடைந்தாள். அத்தினாபுரியை அவர்கள் அடைந்தபோது அறச்செல்வனுக்கு வயது பதினாறு; வீமனுக்குப் பதினைந்து, அருச்சுனனுக்குப் பதினான்கு, நகுல சகாதேவர் இருவருக்கும் வயது பதினொன்று என்று மூல நூல் கூறுகிறது.

அத்தியை அடைந்த ஐலரும் அன்னை குந்தியும் அங்கே ஆறுதல் பெற்றனர். தம்பியின் மைந்தரைத் திருதராட்டிரன் தழுவிக் கொண்டு தடவிக் கொடுத்து அவர்களிடம் அன்பு காட்டினான். துக்கம் விசாரிக்கத் தூரத்தில் இருந்து உறவினர்கள் வந்தார்கள். கரிய மேக வண்ணன் ஆகிய கண்ணனும் வந்து துக்கம் விசாரித்தான். குந்திக்கு ஆறுதல் கூறினர். கிருஷ்ணன் என்ற சொல்லே கண்ணன் என மருவி வழங்கியது.

தன் பதிக்கு வந்தவர்களை வீடுமன், விதுரன் மற்றும் உள்ள பெரியோர்கள் எல்லாம் வரவேற்று விருந்து செய்து அன்பு மொழி பேசிமகிழ்வித்தனர். நூற்றுவரும் ஐவரும் சேர்ந்து வாழ்வர், அதனால் அவர்கள் பகைவர்கள் அழிவர். அவர்களுக்கும் யாதொரு குறையும் நேராது. உதவிக்குப் பெரியவர்கள் நீங்கள் இருக்கிறீர்கள்,” என்று வந்தவர்கள் முகமன் கூறினர்; அவர்களை வீடுமன் வழி அனுப்பினான். ஒரே குளத்தில் மலரும் தாமரையும் ஆம்பலும் போலப் பாண்ட வரும் கவுரவரும் மிக ஒற்றுமையாக வாழ்ந்து வந்தனர். வேறுபாடு அறியாமல் வாழ்ந்தனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாபாரதம்.pdf/40&oldid=1048288" இலிருந்து மீள்விக்கப்பட்டது