பக்கம்:மாபாரதம்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராசீ

39

திலே மயக்கமுற்ற வீமனை வடக்கயிறு கொண்டு கட்டிக் கங்கை வெள்ளத்தில் கொண்டு போய்ப் போட்டான். நீர் அடித்துச் சென்று வீமனைப் பாதளத்தில் கொண்டு சேர்த்தது. அங்கே பாம்பின் குட்டிகள் அவனை நெருங்கிக் கடித்தன. அவற்றின் நஞ்சு இவன் உணவில் உண்ட விஷத்தைப் போக்க மயக்கம் நீங்கிய அவன் கயிறுகளை அறுத்துக் கொண்டு உயிர்தப்பி விடுதலை பெற்றான்.

வந்திருப்பவன் வாயுவின் மைந்தன் என்பது அறிந்து ஆழ நீரில் அடங்கிக்கிடந்த வாசுகி என்னும் பாம்பு அவனை அழைப்பித்து விருந்து செய்து அமுதம் தந்து அவன் ஆயுளை நீடிக்கச் செய்தது, நஞ்சு நீங்க அமுதம் உண்டதால் அவன் மேனி ஒளி பெற்று விளங்கியது. வாசுகி அவனை அங்குத் தங்கி இருக்குமாறு வேண்டினான். எட்டு நாள் அங்கே இருந்து நல் விருந்து உண்டு மகிழ்ந்தான். ஒன்பதாம் நாள் பாம்புகள் அவனைச் சுமந்து கொண்டு வந்து கங்கை நீரில் அவன் விழுந்த இடத்தில் கொண்டு வந்து சேர்த்தன.

வீமனைப் பிரிந்த உடன்பிறந்தவர் நாற்புறமும் சென்று தேடினர். குந்தி மனம் குன்றி ஏங்கித்தவித்தாள். மற்றும் வீடுமன் விதுரன் இவர்கள் எல்லாம் மிகவும் வருந்தினர். இவன் எந்தவித ஊறும் இன்றி ஊர் வந்து சேர்ந்தான். தாயும், தம்பியரும், வீடுமனும், விதுரனும் உவகை கொண்டனர். துரியனின் நண்பர்களும், தம்பியரும் அவலம் கொண்டனர். விற்பயிற்சியும் அரங்கேற்றமும்; கிருபன் ஆசிரியன் ஆதல்.

கவுதம முனிவரின் பேரன் கிருபன் ஆவான். அவன் படைப் பயிற்சி தர ஆசிரியனாக வீடுமனால் அமர்த்தப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாபாரதம்.pdf/42&oldid=1034243" இலிருந்து மீள்விக்கப்பட்டது